இணையமும் நாமும்

இணைய அடிமைகள்
இணைய அடிமைகள்

முன்னர் அடிக்கடி மட்டக்களப்பு நூலக வாசிகசாலைக்கு செல்வதுண்டு. நீண்ட நாட்களுக்குப் பின் நேற்று செல்லக் கிடைத்தது. அதில் பல கட்டுரைகள் இணையத்திற்கு குறிப்பாக பேஸ்புக்கில் அடிமையாக இருக்கின்றமை பற்றியும் நல்ல கட்டுரைகளை வாசிக்கக் கிடைத்தது.

ஒருவர் அதில் இவ்வாறு குறிப்பிடுகின்றார் ஒருநாளைக்கு 30 நிமிடம் பேஸ்புக் பார்க்கிறேன். ஆனால் பதிவுகளை ஏற்றம் செய்து விட்டு நான் விட்டுவிடுவேன். அடுத்த நாள்தான் மறுபடியும் பேஸ்புக் பார்ப்பேன். அடிக்கடி லாக்கின் செய்வது கிடையாது.

ஆனால் பலர் தங்கள் படங்களையோ அல்லது பதிவுகளை இட்டு விட்டு அடிக்கடி எத்தனை லைக் வருகிறது என்பதனை பார்த்துக் கொள்கின்றனர். இதனால் அவர்களது எண்ணம் முழுவதும் பேஸ்புக்கினை சுற்றி சுற்றியே இருக்கும். உணவருந்தும் பொழுதும் கூட எவ்வாறு இதைப் பற்றி எழுதலாம் என்கிற எண்ணம் வந்துவிடுகிறது. இதனால் தங்களைச் சூழ இருக்கிறவர்களை கூட அவதானிக்க மறந்து விடுகிறார்கள்.

மேலும் நமது பதிவுகளுக்கு அல்லது படங்களுக்கு மற்றவர்கள் போடும் கருத்துக்களை பற்றி கவலைப்படாதீர்கள். காரணம் பதில் கருத்துக்களை போடுபவர்கள் எல்லாம் நம்முடைய பதிவுகளை ஒழுங்காக வாசித்துப் போடுபவர்கள் அல்லர். பொழுதுபோக்கிற்காக மற்றவர் மனம் பற்றி யோசிக்காமல் அவர்கள் பதில்கள் இருக்கக்கூடும். அதை நாம் கவனத்தில் கொள்ளும்போது வீணான மன உளைச்சல்களும் சஞ்சலங்களும் உண்டாகும்.

எனவே இணையத்தினை எவ்வாறு சரியாகக் கையாள்வது என்பதனை நாம் அறிந்து கொள்ள வேண்டும. தனியே சமூக வலைத்தளத்திற்குள்ளேயே முடங்கி விடாமல் இணையத்தில் உள்ள நல்ல விடயங்களையும் தேடுங்கள். அல்லது பேஸ்புக் போன்றவற்றில் பல பொய்யான விடயங்கள் கூட உண்மை போன்று செய்தியாக வந்து விடுகிறது. அதனை இணையத்தில் தேடுங்கள் அது சரியா பிழையா என்பதனை அறிந்து கொள்ளுங்கள். பல லட்சம் நமக்குத் தேவையான நல்ல செய்திகள் பரந்து இருக்கின்றன.

சிந்தைகளை விரிவு படுத்தவோம்.

அமர்நாத் தவராஜா