நான் வெளியூரில் வேலை செய்த பொழுது சாப்பாட்டிற்கு “ரசம்” என்ற ஒன்றை ஒரு “கறிபேக்கில்” தருவார்கள். அதில் ஒரு கலவை ஒரு புறம் தண்ணி ஒரு புறம் இருக்கும். அதனை ஒரு குலுக்கு குலுக்கினால் ரசம் ஒரு “கலரில்” வரும்.
முன்பு வீட்டில் தொடர்ந்து சாப்பிடும் பொழுது கடையில் சாப்பாடு எப்போதாவது இருந்து விட்டு சாப்பிட்டால் சுவையாக இருப்பது போல தோன்றும். ஆனால் தொடர்ந்து கடையில் சாப்பிட்டால் அதற்குப் பிறகு கடைச் சாப்பாட்டின் பக்கம் தலையே காட்ட பயமாய் இருக்கும்.
நம்முடைய தாய் நம்முடைய உடலுக்கு தேவையான பொருட்கள் எது தேவையற்றது எது என பார்த்துப் பார்த்து சமைப்பார். ஆனால் கடையில் ஒன்று போட்டால் இரண்டு லாபம் வருவதற்காக எதை வேண்டுமானாலும் போட்டு சுவையை உண்டாக்கலாம்.
பலருக்கு வீட்டை விட்டு வெளியேறிய பின்புதான் தாயின் சமையலின் அருமை உணர்வார்கள். நான் திருகோணமலையில் வேலை செய்த பொழுது சனி, ஞாயிறு எப்படியாவது வீட்டிற்கு வந்துவிடுவேன். அந்த இரண்டு நாளாவது என் தாயின் கையால் சமைத்த உணவு உண்டால் மற்ற ஐந்து நாட்கள் தாக்குப் பிடிக்கலாம்.
இருக்கும்போது உணர்வதில்லை வீட்டில் கிடைக்கின்ற சுகங்களை தொலைத்து விட்டு தேடுகின்றோம்.
அமர்நாத்
படம் : இணையம்