தொழிற்கல்வியும் வேலை வாய்ப்பு தொடர்பான சிந்தனைகளும்

தொழிற்கல்வி
தொழிற்கல்வி

இன்றைய வளர்ந்து வரும் இளம் சந்ததியினர் கல்வி தொடர்பில் எதிர்காலத்தில் தாங்கள் எந்தத் துறையினை தெரிவு செய்வது என்பது பற்றிய தெளிவான முடிவுகளைப் பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது.


நாம் வளர்ந்து வரும் பொழுது எமது பெற்றோர் எதிர்பார்ப்பது ஒரு வைத்தியராக வேண்டும் அல்லது பொறியியலாளராக வர வேண்டும் என. அதனையொட்டியே குழந்தைகளை வளர்த்து வருபவர்கள் குறித்த குழந்தை வளர்ந்து வரும்பொழுது விஞ்ஞானம் மற்றும் கணிதம் தொடர்பில் அவை குறைந்த அறிவைக் கொண்டிருக்குமாயின் அது மாணவராக வளரும் பொழுது அவர்கள் அடுத்து என்ன தெரிவை மேற்கொள்வது என தடுமாற்றத்தினை எதிர்கொள்கின்றார்கள்.
எனினும் எமது நாட்டில் சாதாரண தரம் முடித்த பின்னர் தொழிற்கல்வியினை மேற்கொள்வதற்கு பல கல்வி நிலையங்கள் உள்ளன. தொழிற்பயிற்சி அதிகார சபையின் கீழ் வரும் பல நிலையங்கள் அந்த சேவைகளை வழங்கிக் கொண்டு இருக்கின்றன.
அதிலும் சில மாணவர்கள் குறித்த சில விடயங்களில் அதாவது புதிய கண்டுபிடிப்புக்கள் பல்துறை ஊடகங்கள் தொடர்பிலான கற்கைகள் மற்றும் ஓவியம் வரைதல் போன்ற துறைகளில் சிறப்புத் தேர்ச்சி உள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு நமது பிரதேசத்தில் வாழ்ந்து கொண்டே அத்துறைகளை தொழில் ரீதியாக மாற்றுவதற்கு பல சவால்கள் காணப்படுகின்றன.
மேலும் நமது பிரதேசத்தில் விவசாயம் மற்றும் மீன்பிடி என்பன தொழில் தரும் துறைகளாக உள்ளன. அவற்றினை வளர்ச்சியடைந்துள்ள தொழில்நுட்பத்திற்கேற்ப நாம் சில மாற்றங்களை மேற்கொள்ளும்போது கூடியளவு அறுவடைகளை பெற்றுக் கொள்ள முடியும்.
இத்துறைகளிலும் எமது மாணவர்கள் எதிர்காலத்தில் ஈடுபட வேண்டும். நாமும் இதற்குரிய பங்களிப்புகளை வழங்க வேண்டும்.

இலங்கையில் காணப்படும் தொழில்சார் கல்விகளுக்கான சில இணைய சுட்டிகள்

http://www.vtasl.gov.lk/

http://www.univotec.ac.lk/