விண்டோஸ் 10 : நவம்பர் பதிப்பின் புதிய அம்சங்கள்

விண்டோஸ் 10 இன் புதிய பதிப்பு, Threshold 2 என அழைக்கப்பட்ட பதிப்பு கடந்த வாரத்தில் வெளியிடப்பாது. ஏற்கனவே விண்டோஸ் 10 இல் இயங்கும் கணணிகளில், விண்டோஸ் அப்டேட் மூலம் இது தானாகவே நிறுவப்படும். அல்லது ISO கோப்பைத் தரவிறக்கி பூரணமான தனி நிறுவலாகவும் நிறுவிக்கொள்ளலாம்.

மைக்ரோசாப்ட் முன்னரே தெரிவித்தபடி, விண்டோஸ் 10 என்பதே விண்டோஸ் பதிப்பின் கடைசிப் பதிப்பாகும். அப்படியென்றால், விண்டோஸ் 11 என்று அடுத்த பதிப்பு வெளியிடப்படாமல், விண்டோஸ் 10 என்னும் பெயரிலேயே புதிய அம்சங்கள் மற்றும் பயன்பாடுகள் விண்டோஸ் இயங்குமுறைமைக்கு விண்டோஸ் அப்டேட் மூலம் கொடுக்கப்படும்.

ஜூலை மாதத்தில் விண்டோஸ் 10 வெளிவரும் போது, அதனது அடுத்த பதிப்பு இந்த ஆண்டு இறுதிக்கு முதல் வெளிவரும் என தெரிவிக்கப்பட்டது, அதேபோல கடந்த வாரத்தில் விண்டோஸ் 10 இன் புதிய பதிப்பான “1511” வெளியிடப்பட்டது.

இதில் இருக்கும் புதிய அம்சங்கள், மற்றும் மாற்றமடைந்த விடயங்கள் பற்றிப் பார்க்கலாம்.

டைட்டில் பட்டியில் தீம் நிறம்

விண்டோஸ் 10 இன் 1511 பதிப்பில் கண்ணுக்கு உடனடியாகப் புலப்படும் மாற்றம், விண்டோக்களின் டைட்டில் பட்டி நிரமாக்கப்பட்டுள்ளது. அதாவது முன்னைய விண்டோஸ் 10 பதிப்பில் டைட்டில் பட்டி வெறும் சாம்பல் நிறமாகவே காணப்பட்டது. ஆனால் தற்போது உங்கள் தீம் நிறம் என்னவோ, அதே நிறத்தை டைட்டில் பட்டியிலும் காணலாம்.

இதனைச் செயற்படுத்த நீங்கள் செட்டிங்க்ஸ் ஆப்பில் இதற்கான தெரிவை செலக்ட் செய்யவேண்டும். அதற்குப் பின்வருமாறு செல்லலாம்.

ximg_562993c806281.png.pagespeed.ic.IeQwiOOTOk.png

Setting -> Personalization -> Colors என்கிற பகுதிக்குச் சென்று, “Show colors on Start, taskbar, action center, and title bar” என்கிற தெரிவை செலக்ட் செய்யவேண்டும்.

மெனுக்களில் புதிய மாற்றங்கள்

விண்டோஸ் 10 வெளிவந்தபோது பலரும் குறைபட்டுக்கொண்ட விடயம், பல்வேறு பட்ட பாகங்களில் மெனுக்கள், பல்வேறு தோற்றங்களில் காணப்படுகின்றன என்றாகும். அதாவது, மெனுக்களுகிடையில் ஒரு சீரான ஒற்றுமைத்தன்மை இல்லை என்பதே அது.

windows-10-context-menu_cr

அதனைப் போக்கும் விதமாக விண்டோஸ் 10 புதிய பதிப்பில், பல  இடங்களில் தெரியும் மெனுக்கள், சீராக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமல்லாது, இலகுவாக அவற்றை தெரிவு செய்ய உதவும் விதமாக மெனு தெரிவுகளுக்கு இடையில் இடைவெளியும் விடப்பட்டுள்ளது.

புதிய அக்டிவேசன் முறை அறிமுகம்

விண்டோஸ் 7, 8, மற்றும் 8.1 கீக்களைக் கொண்டு தற்போது விண்டோஸ் 10 இன் புதிய பதிப்பை அக்டிவேட் செய்துகொள்ள முடியும். முன்னைய விண்டோஸ் 10 பதிப்பில் இது சாத்தியமற்றதாக இருந்தது.

விண்டோஸ் 10 இன் பாவனையாளர்களை அதிகரிக்கும் நோக்கோடு இதனை மைக்ரோசாப்ட் அமுல்படுதியிள்ளது எனலாம்.

அதேபோல ஏற்கனவே விண்டோஸ் 10 அக்டிவேட் செய்யப்பட்ட பயனர் கணக்கை மீண்டும் புதிய விண்டோஸ் 10 கணனியில்  உபயோகிக்கும் போது, புதிய விண்டோஸ் 10 ஐ தானாக அக்டிவேட் செய்யும் முறையான “digital entitlement” செயன்முறையும் தெளிவாக்கப்பட்டுள்ளது.

தோலைந்த கணணியைத் தேடும் முறை

அண்ட்ராய்டு மற்றும் ஐஒஸ் ஆகியவற்றில் இருக்கும் “Find my Device” அம்சம் தற்போது விண்டோஸ் 10 இலும் கிடைக்கிறது. செட்டிங்க்ஸ் ஆப்ஸ்ஸினுள் “Update & Security” என்னும் பகுதியில் இதனை நீங்கள் செயற்ப்படுத்திக்கொள்ளலாம்.

ximg_56299391192b6.png.pagespeed.ic.p-vu8o_Mhv

கணணிகளுக்கு இது பெரிதும் பயன்படாவிடினும், லேப்டாப், டேப்லட் போன்ற இலகுவாகக் காவிச் செல்லைக்கூடிய சாதனங்களுக்கு இது பெரிதும் பயன்படும்.

GPS ஐப் பயன்படுத்தி கணணியின் இருப்பிடத்தைக் கண்டறியவும் இந்த வசதி உதவுகிறது.

மைக்ரோசப்ட் எட்ஜ் (Edge) இணையஉலாவியில் புதிய அம்சங்கள்

மைக்ரோசாப்ட் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் என்னும் இணையஉலாவியை விடுத்து, விண்டோஸ் 10 இல் எட்ஜ் எனப்படும் புதிய உலாவியை அறிமுகப்படுத்தியது. தற்போது, புதிய பதிப்பான 1511 இல் இருக்கும் எட்ஜ் உலாவியில் பல்வேறு பட்ட புதிய அம்சங்களை மைக்ரோசப்ட் அறிமுகப்படுத்தியுள்ளது.

microsoft-edge-tab-preview

அதில் முக்கியமானது டாப் முற்காட்சி (tab preview) – நீங்கள் பல்வேறு டாப்களை திறந்திருந்தால், அதன் டாப் பட்டியில் மவுஸை கொண்டு நிறுத்தும் போது, அந்தத் தளத்தின் ஒரு சிறு முற்காட்சி சிறிய பெட்டியினுள் தெரியும்.

மேலும் புதிய எட்ஜ் HTML5, CSS3 மற்றும் ECMAScript ஆகியவற்றுக்கு மேலோங்கிய ஆதரவளிக்கிறது. இதன் மூலம் புதிய இணையத்தளப் பக்கங்கள் சீராக எட்ஜ் உலாவியில் தெரியும்.

இப்படிப் பல புதிய வசதிகள் இருந்தும், இன்னும் extensions ஆதரவு எட்ஜ் உலாவிக்கு வரவில்லை என்பது ஒரு பின்னடைவே. மைக்ரோசாப்ட் அடுத்த வருட விண்டோஸ் 10 பதிப்பில் இதற்கான ஆதரவு வரும் என தெரிவித்துள்ளது. கூகிள் குரோமில் எப்படி extensions வேலை செயகிறதோ அதேபோல எட்ஜ் உலாவியிலும் extensions தொழிற்படும் என கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம்.

Skype மற்றும் Sway ஆப்ஸ் விண்டோஸில் உள்ளிணைக்கப்பட்டுள்ளது

Skype video, Messaging, மற்றும் Phone ஆகிய ஆப்ஸ்கள் தற்போது விண்டோஸ் 10 இல் உள்ளினைக்கப்பட்டு வெளிவருகிறது. அதுமட்டுமல்லாது இலகுவாக அறிக்கைகள், கதைகள், slides மற்றும் presentation ஆகியவற்றை செய்யும்ஆபீஸ் ஆப் Sway விண்டோஸ் 10 இல் உள்ளடக்கப்பட்டுள்ளது.

Sway பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.

மேம்படுத்தப்பட்ட Cortana

Cortana தற்போது திரைப்படங்களை உங்களுக்காக நோட்டமிடுவதுடன், காலண்டர் நிகழ்வுகள் மற்றும் உங்கள் குறிப்புக்களையும் அதனால அலசி ஆராய்ந்து உங்களுக்கு உதவ முடியும்.

ximg_56299a4eaff72.png.pagespeed.ic.vqULwe3lgD

அதேபோல மிஸ்கால், SMS போன்றவற்றையும் Cortana தற்போது உங்களுக்காக தெரிவிக்கும்.

மேலும் Cortana செயற்பட தற்போது மைக்ரோசப்ட் பயனர் கணக்கு அவசியமில்லை. முன்னைய விண்டோஸ் 10 பதிப்பில் Cortana தொழிற்பட கட்டாயம் நீங்கள் மைக்ரோசாப்ட் கணக்கைக் கொண்டிருக்க வேண்டியது கட்டாயமாக இருந்தது.

மேலும் பல அம்சங்கள்

இன்னும் பல புதிய அம்சங்களை விண்டோஸ் 10 இன் 1511 பதிப்பு கொண்டுவந்துள்ளது.

நீங்கள் கவனிக்ககூடிய அம்சங்கள் என்றால், புதிய ஐகான்கள். கொன்றோல் பனால் மற்றும் சிஸ்டம் ஆப்ஸ்களில் புதிய ஐகான்கள் விண்டோஸ் 10 இன் flat look ஐ பிரதிபலிக்குமாறு மாற்றப்பட்டுள்ளது.

உங்கள் பிரிண்டரை தற்போது விண்டோஸ் பராமரித்துக்கொள்ளும். அப்படியென்றால், நீங்கள் மீண்டும் மீண்டும் பிரிண்டரை, பிரிண்ட் பண்ணும் போது தெரிவு செய்யவேண்டிய அவசியமில்லை.

இறுதியாக நீங்கள் பயன்படுத்திய பிரிண்டரை அது Default பிரிண்டர் ஆக தெரிவுசெய்துகொள்ளும்.

தொடுதிரையைப் பயன்படுத்துபவர்களுக்கு இலகுவாக புதிய touch வசதிகள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. விண்டோஸ் 8 இல் இருந்த தொடுதிரை வசதிகள் விண்டோஸ் 10 காணாமல் போயின. ஆனால் தற்போது அவை மீண்டும் வந்துள்ளது.

அது மட்டுமலாது, நினைவக மேலாண்மையில் புதிய மாற்றங்களை விண்டோஸ் 10 செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மைக்ரோசப்ட் ஏற்கனவே விண்டோஸ் 10 அடுத்த வருடப் பதிப்பான “Redstone” ஐ தயாரிக்கத் தொடங்கிவிட்டது. அடுத்த சில மாதங்களில் Insider களுக்கு அது வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

படங்கள்: இணையம்


மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள். தொடர்ந்து இணைந்து இருங்கள்.

https://www.facebook.com/parimaanam