மின்காந்த அலைகள் ― மின்னூல்

இன்று நாம் பயன்படுத்தும் பெரும்பாலான இலத்திரனியல் சாதனங்கள், உதாரணமாக உங்கள் செல்போன் தொடக்கம், டிவி ரிமோட் வரை மின்காந்த அலைகள் உங்கள் கண்களுக்குத் தெரியாமல், உங்கள் கட்டளைகளை நிறைவேற்றிக்கொண்டுதான் இருக்கின்றன. விண்வெளியில் சஞ்சரிக்கும் செயற்கைக்கோள்கள் தொடக்கம், உடல் பரிசோதனைக்காக வைத்தியசாலைகளில் எடுக்கப்படும் எக்ஸ்ரே வரை எல்லாமே மின்காந்தஅலைகளால் எதோ ஒரு விதத்தில் தொடர்புபடுத்தப்படுகின்றது. அப்படியான இந்த மின்காந்த அலைகள் என்றால் என்ன? எங்கிருந்து அவை வருகின்றது, அவற்றின் பயன்பாடுகள் மற்றும் அதில் இருக்கும் வேறுபட்ட அலைக்கற்றைகளின் பண்புகளையும் பற்றிய ஒரு சிறிய அறிமுக மின்னூலே இது.


கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தி தரவிறக்கிக்கொள்ளலாம்.

மின்காந்த அலைகள் PDF ― 2.09 MB கோப்பு


இலவசமாக அறிவியலில் ஆர்வம் கொண்டுள்ள மக்களுக்கும் மாணவர்களுக்கும் பயன்படும் நோக்கோடு பரிமாணம் தளத்தினால் வெளியிடப்பட்ட கட்டுரைத் தொகுப்பின் மின்னூல் வடிவமே இது.

இந்தக் கட்டுரைத்தொகுப்பில் இருக்கும் எழுத்துப் பிழைகள், இலக்கணப்பிழைகளை பின்வரும் வழிமுறைகளில் சுட்டிக்காட்டுவதன் மூலம், இந்த மின்னூலின் தரத்தை உயர்த்த உதவலாம்.

parimaanam.mag@gmail.com என்கிற மின்னஞ்சலுக்கு பிழைகளை சுட்டிக்காட்டி மின்னஞ்சல் அனுப்பலாம், அலல்து பரிமாணத்தின் முகப்புத்தக பக்கமான https://www.facebook.com/parimaanam/ என்கிற பக்கதினூடாக தகவல் அனுப்ப முடியும்.