பயனுள்ள கூகிள் குரோம் உதவி நிரல்: The Great Suspender

இன்று நாம் பயன்படுத்தும் அனைத்து இணைய உலாவிகளுமே “டப்” வசதியைக் கொண்டிருகின்றன. இது ஒரு இணையத் தளத்தில் இருந்து கொண்டு அடுத்த தளத்திற்கு சென்றாலும் முன்னைய தளத்தில் இருக்கும் தகவல்களையும் பார்க்கவும் பயன்படுத்தவும் உதவுகிறது.

ஒரு tabஇல் முகப்புத்தகத்தை திறந்து வைத்துவிட்டு, அடுத்த tabஇல் செய்தி வாசிக்கலாம், அதே போல இன்னொரு tab இல் ஈமெயில் பார்க்கலம். இப்படி பல tabகளைப் பயன்படுத்துவது உண்மையிலேயே பயனுள்ள விடயம்.

ஆனால் இதில் இருக்கும் பிரச்சினை, நீங்கள் திறக்கும் ஒவ்வொரு புதிய tab இற்கும் மேலதிக ram ஒதுக்கப்படும். ஆகவே நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக புதிதாக திறக்கும் tabகள் உங்கள் கணனியில் இருக்கும் ram ஐ கபளீகரம் செய்துவிடும், இது உங்கள் கணணி மெதுவாக இயங்கவும், சிலவேளைகளில் செயலிழக்கவும் காரணமாகலாம். மேலும் நீங்கள் லேப்டாப் பயன்படுத்துபவராக இருந்தால், இந்த மேலதிக tabகள் உங்கள் லேப்டாப் பட்டறியில் உள்ள மின்சார சேமிப்பின் அளவைக் குறைக்கும்.

பயன்படுத்தி முடிந்த tabகளை மூடிவிடுவதன் மூலம் இந்தப் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கலாம், ஆனால் மறதி, மேலும் அந்த tab மீண்டூம் தேவைப்படலாம் என்கிற காரணங்களுக்காக நாம் அவற்றை மூடிவிடுவதில்லை. ஆகவே இப்படியாக நீங்கள் பயன்படுத்திக் கொண்டிராத tabகள் பின்னணியில் தொழிற்பட்டுக்கொண்டே இருந்து உங்கள் கணணியின் செயல்திறனைப் பாதிக்கும்.

இதற்கு தீர்வாக வருவதுதான் The great Suspender எனும் கூகிள் குரோம் உதவி நிரல்.

tab suspender

இதனை நீங்கள் குரோம் வெப்ஸ்டோர் இல் இருந்து டவுன்லோட் செய்துகொள்ளலாம். அதகான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. முதலில் இதன் பயன்பாடு என்ன என்று பார்க்கலாம்.

இதனது பெயரே சொல்லுவது போல, நீங்கள் பயன்படுத்தாத tabகளை இது இடைநிறுத்தி வைக்கிறது. நீங்கள் இதன் செட்டிங்க்ஸ் பக்கத்தில், எவ்வளவு நேரத்திற்கு பிறகு பயன்படாத tabகளை இடைநிறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுவிட்டால், அதன் பின்னர் நீங்கள் குறித்த tabஐ கொடுக்கப்பட்ட நேரத்தினுள் கிளிக் செய்யாவிட்டால், தானாகே அந்த tab இடைநிறுத்தப்படும். இது அந்த tab ஐ மூடிவிடாது, மாறாக அந்த tab இல் இருக்கும் தளத்தை இடைநிறுத்தி வைத்துவிடும், ஆகவே ram அந்த tabஇல் இருக்கும் தளத்திற்கு பயன்படாது.

மீண்டும் நீங்கள் அந்த tab ஐ கிளிக் செய்தால், அங்கே மீண்டும் அந்த தளத்தை மீள்உயிர்பிப்பதற்கு லிங்க் காணப்படும் அதனைக் கிளிக் செய்வதன் மூலம் அந்த தளத்தை பார்வையிடலாம்.

இந்த உதவிச் செயலி பின்வரும் வசதிகளையும் தருகிறது.

  1. “pin” செய்யப்பட்ட tabகளை இடைநிறுத்தாது தடுத்தல்.
  2. சேமிக்கப்படாத “உள்ளீட்டு படிவங்கள்” உள்ள தளங்களை இடைநிறுத்தாது தடுத்தல்.
  3. இணையத்தில் இணைக்கப்பட்டிருந்தால் மட்டும் இடைநிறுத்துதல்.
  4. பட்டறி சக்தியில் இயங்கினால் மட்டுமே இடைநிறுத்துதல்.
  5. tabஐ கிளிக் செய்தவுடன், இடைநிறுத்தப்பட்ட தளத்தை மீள்உயிர்பித்தல்.

மேலும் நீங்கள் விரும்பும் தளங்களை இடைநிறுத்தாது வைத்திருக்க தேவையான whitelist ஆப்சனையும் இந்த செயலி கொண்டுள்ளது.

லிங்க்: The great Suspender ஐ குரோமில் இன்ஸ்டால் செய்ய


மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் :- https://facebook.com/parimaanam