புதனுக்கு மேலே பறக்கலாம்

புதன் சூரியனுக்கு மிக அண்மையில் சுற்றிவரும் கோள். நாசாவின் மெசெஞ்சர் விண்கலம் 2011 இல் இருந்து 2015 வரையான காலப்பகுதியில் புதனைச் சுற்றிவந்து எடுத்த புகைப்படங்களை ஒன்று சேர்த்து, புதனுக்கு மேலே பறந்தால் எப்படி இருக்கும் என்று இந்த வீடியோவை உருவாகியுள்ளனர்.

பார்ப்பதற்கு நிலவு போலவே இருக்கும் புதனின் மேற்பரப்பில் பல பள்ளங்களும் குழிகளும் காணப்படுகின்றன. சூரியனுக்கு மிக அருகில் சுற்றிவந்தாலும், புதனின் துருவப்பகுதியில் நீர் இருப்பதற்கான அறிகுறிகளை மெசெஞ்சர் விண்கலம் கண்டறிந்தது.

புதனின் மேற்பரப்பையும், அதன் காந்தப்புலக் கோளத்தை முழுதாக அறியவும் ஐரோப்பாவும் ஜப்பானும் சேர்ந்து 2018 இல் BipiColombo எனும் விண்கலத்தை அனுப்பவுள்ளது.

வீடியோவை பார்க்க தவறாதீர்கள்!

இன்னுமொரு குட்டித் தகவல்- புதன் மிகவும் வெதுவாக சுழல்வதால், ஒவ்வொரு இரண்டு முறை சூரியனைச் சுற்றிவரும் போதும், மூன்று முறை மட்டுமே சுழல்கிறது.

வீடியோ உதவி: NASA, JHUAPL, CIW; Processing: Roman Tkachenko; Music: Open Sea Morning by Puddle of Infinity