கோர்டானா தற்போது கூகிள் கணக்குகளுடன் சிங் ஆகிறது

மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 இயங்குமுறைமையில் இருக்கும் முக்கிய வசதி கோர்டானா எனும் டிஜிடல் அசிஸ்டன்ட். தற்போது இந்த வசதியில் கூகிள் கணக்குகளையும் இணைத்து சிங் செய்ய முடியும். இதன் மூலம் கூகிள் கணக்குகளில் இருக்கும் தகவல்களை கோர்டானாவிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம்.

கூகிள் கணக்குகளை இணைப்பதன் மூலம் ஜிமெயில், கூகிள் கலண்டர் போன்றவற்றின் அப்டேட்களை கோர்டானா மூலம் இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

தற்போது இந்த வசதி விண்டோஸ் 10 இல் மட்டுமே செயற்படுகிறது. மைக்ரோசாப்ட்டின் கோர்டானா ஐஒஸ் மற்றும் அண்ட்ராய்டு ஆகிய இயங்குமுறைகளுக்கும் இருந்தாலும், தற்போதைக்கு இந்த கூகிள் சிங் வசதி இவற்றுக்கு இல்லை; ஆனால் வெகுவிரைவில் இவற்றிற்கும் இந்த வசதி வரும் என எதிர்பார்க்கலாம்.

எல்லா வசதிகளும் பூரணமாக தொழிற்படவில்லை, மற்றும் மைக்ரோசாப்ட் கூட இந்த வசதியை இன்னமும் முறைப்படி அறிவிக்கவில்லை, ஆகவே கூகிள் சிங்கில் இன்னும் மேலதிகமான வசதிகளை எதிர்பார்க்கலாம்.

கூகிள் சிங் வசதியை செயற்படுத்திக்கொள்ள, கோர்டானாவை திறந்து, நோட்புக்ஸ் tab இல் இருக்கும் connected services ஐ தெரிவு செய்து அதில் இருக்கும் Gmail ஐ தெரிவு செய்யவும்.