கஸ்பர்ஸ்கை நிறுவனத்தின் பதிய பதிப்பு வெளியீட்டில் இலவச பதிப்பும் உள்ளடங்குகிறது. இதனால் தகவல் தொழில்நுட்ப ஆபத்துக்கள், நெட்வொர்க்ஸ் தாக்குதல், மற்றும் இணைய மோசடி போன்றவற்றில் இருந்து பாதுகாப்பளிக்கமுடியும் என்று கஸ்பர்ஸ்கை லேப் கூறுகிறது.
கஸ்பர்ஸ்கை இலவச அன்டிவைரஸ் இல் இருக்கும் அம்சங்கள்:
- கோப்பு அன்டிவைரஸ் – இது பைல்களை பாதுகாக்க உதவும்.
- ஈமெயில் அன்டிவைரஸ் – ஈமெயில்கள் மூலம் வரும் வைரஸ்களை தடுக்கும்.
- இணைய அன்டிவைரஸ் – இணையத்தளங்களில் இயங்கும் பாதகமான ஸ்கிரிப்ட்களை தடுக்கும். மேலும் ஆபத்தான இணையத்தளங்கள் தடுக்கப்படும்.
- IM அன்டிவைரஸ் – இன்ஸ்டன்ட் மசேஜ் மூலம் வரும் ஆபத்துக்களை தடுக்கும்.
- அன்டி பிஷிங் – பிஷிங் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும்.
- On-screen விசைப்பலகை – கீலாக்கர் வைரஸ்களிடம் இருந்து உங்கள் ரகசியங்களை பாதுகாக்க.
- சிஸ்டம் மொனிட்டர் – உங்கள் கணனியில் என்னென்ன ப்ரோக்ராம்கள் மாற்றங்களை செய்கிறது என்று அவதானிப்பதுடன், ஏதும் பாதகம் நிகழ்ந்தால் அதனை தடுக்கவும் வழிசெய்யும்.
- நெட்வொர்க் தாக்குதல் தடுப்பி – நெட்வொர்க் தாக்குதல்களில் இருந்து உங்கள் கணனியையும் நெட்வொர்க்கையும் பாதுகாக்கும்.
கஸ்பர்ஸ்கை இலவச அன்டிவைரசை கீழே உள்ள லிங்கில் இருந்து டவுன்லோட் செய்துகொள்ளலாம்.
ஒரே ஒரு எச்சரிக்கை: கஸ்பர்ஸ்கை இலவச அன்டிவைரஸ் உடன் கஸ்பர்ஸ்கையின் இன்னொரு தயாரிப்பான Kaspersky Secure Connection எனும் VPN ப்ரோக்ராம்மும் வருகிறது. இந்த ப்ரோக்ராம்மின் இலவச வெர்ஷன் நாளொன்றுக்கு 200 MB டேட்டாவை VPN மூலம் பயன்படுத்த அனுமதிக்கிறது.