தோட்டத்து குயிலிசை கேட்டேன்
அது வந்த திசையினை தேடித் திரிந்தேன்
நெஞ்சம் மயக்கிடும் கானம், அது
குயிலின் வழி இந்த இயற்கையின் பாடம்
காற்றில் கலந்தந்தக் கானம், அது
காடென்றும் வீடென்றும் மயங்குவதில்லை
நெஞ்சில் நிறைந்தந்தப் பாடம்
மானிடர் வேற்றுமையை சொல்லிக்காட்டும்
நான் உயர்வென்றும் நீ சிறிதென்றும்
சொல்லித்திரிந்திட்ட காலம், அது
மானிடர் மூடமையை பறைசாற்றும், ஆனால்
தோட்டத்துக் குயிலிசை என்றும்,
வேலைக்காரன் காதுக்கும் எட்டியே செல்லும்
சிறி சரவணா