நாம் எங்கிருந்து வந்தோம், எதனால் நாம் உருவாகியுள்ளோம், இந்தப் பிரபஞ்சத்தில் வேறென்ன இருக்கின்றன என்கிற பெரும் கேளிவிகளுக்கு விடை தேடுவதால் மட்டுமே விண்ணியல் ஒரு சுவாரசியமான விஞ்ஞானம் என்று கூறிவிடமுடியாது. அதையும் தாண்டி அதில் இருக்கும் அழகு எம்மைக் கவர்கிறது. ஹபிள் தொலைநோக்கி எடுக்கும் புகைப்படங்களை பார்த்து அசராதவர் யாரும் உண்டோ? 😍
செக்ஸ்டன் பி பேரடையில் பல புதிரான அம்சங்கள் இருக்கின்றன. அவற்றில் சில ரூபி கற்களை போன்ற சிவப்பு நிற வாயு மண்டலம் புதிதாக விண்மீன்களை உருவாக்கும் பண்ணைகள். இவற்றில் இருந்து புதிதாக பிரகாசமான விண்மீன்கள் பிறக்கின்றன. வேறு சில கோள் நிற மண்டலங்கள் – இவை விண்மீன்களின் கல்லறைகள்.

மேலே உள்ள படத்தில் இந்த விண்மீன் பேரடையை நீங்கள் அவதானிக்கலாம், அதேவேளை நமது பால்வீதியில் இருக்கும் விண்மீன்களும் அப்பேரடைக்கு முன்னால் பிரகாசிப்பதை பார்க்கலாம்.
செக்ஸ்டன் பி குறள் விண்மீன் பேரடைக்கு இந்தப் பெயர் அதிருக்கும் விண்மீன் கூட்டத்தின் பெயரான செக்ஸ்டன் இல் இருந்து வந்தது. (செக்ஸ்டன் என்பது அடிவானத்தில் இருந்து விண்மீன் இருக்கும் உயரத்தை அளக்கும் கருவியின் பெயராகும்.) இந்த விண்மீன் கூட்டத்தை போலிஷ் விண்ணியலாளர் ஜொகானஸ் ஹெவிலியஸ் 1687 இல் முதன்முதலில் அவதானித்தார். அவரும் அவரது மனைவியும் விண்மீன்களை அவதானிப்பதில் பயன்படுத்திய ஒரு கருவியின் பெயரையே இந்த விண்மீன் கூட்டத்திற்கு வைத்தார்.
படவுதவி: KPNO/NOIRLab/NSF/AURA Data obtained and processed by: P. Massey (Lowell Obs.), G. Jacoby, K. Olsen, & C. Smith (AURA/NSF) Image processing: T.A. Rector (University of Alaska Anchorage/NSF’s NOIRLab), M. Zamani (NSF’s NOIRLab) & D. de Martin (NSF’s NOIRLab)
மேலதிக தகவல்
எலிசபெத் ஹெவிலியஸ் முதலாவது பெண் விண்ணியலாளர் என கருதப்படுகிறார். இவரைக் கவுரவிக்கும் பொருட்டு ஒரு சிறுகோளிற்கும், வெள்ளியில் இருக்கும் ஒரு பள்ளத்தாக்கிற்கும் இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது.
