விண்ணியல்

  • வெடித்துச் சிதறும் பிரபஞ்சத்தின் பிரகாசமான விண்மீன் பேரடை

    வெடித்துச் சிதறும் பிரபஞ்சத்தின் பிரகாசமான விண்மீன் பேரடை

    அளவுக்கதிகமான புகழுக்கும் ஒரு விலை இருக்கிறது என்று கூறுவது வழமை, ஆனால் அப்படிப் புகழுக்காக இந்தப் படத்தில் இருக்கும் விண்மீன் பேரடை கொடுத்த விலை மிகவும் அதிகம். பிரபஞ்சத்திலேயே மிகவும் பிரகாசமான விண்மீன் பேரடை என்னும் பெயரைப் பெறுவதற்காக இது தன்னைத்தானே அழித்துக் கொண்டிருக்கிறது!

  • ஒன்பதாவது கோள் – மீண்டும் ஒரு கண்டுபிடிப்பு

    ஒன்பதாவது கோள் – மீண்டும் ஒரு கண்டுபிடிப்பு

    நானெல்லாம் பாடசாலையில் கல்விகற்கும் போது சூரியத்தொகுதியில் ஒன்பது கோள்கள் இருக்கின்றன என்றுதான் படித்தேன். அப்போது புளுட்டோவும் ஒரு கோளாக இருந்தது. பின்னர் 2006 இல் சர்வதேச விண்ணியல் கழகம் (IAU), புளுட்டோவை குறள்கோள் (dwarf planet) என அறிவித்தது.

  • அளவுக்கதிகமாய் பிறந்த விண்மீன்கள்

    அளவுக்கதிகமாய் பிறந்த விண்மீன்கள்

    முட்டாள்த்தனமான கேள்வி என்று ஒன்றும் இல்லை. சில சில்லறைத்தனமான கேள்விகள்தான் மகத்தான விடைகளுக்குக் காரணமாக இருந்திருகின்றன. ஒரு உதாரணத்திற்கு, ஏன் விண்வெளி இருளாக இருக்கிறது? என்ற கேள்வியைப் பார்க்கலாம்.

  • பிரபஞ்சச் சமையல்

    பிரபஞ்சச் சமையல்

    பிரபஞ்சத்தில் நடைபெறும் சமையல் என்பது, நம் வீட்டில் சமைப்பது போலவே; சரியான சேர்மானங்களை (மா, பால், முட்டை) சரியான முறையில் சேர்த்தால் (சூடான சமையல்ப் பாத்திரம்), அருமையான ருசியான ஒன்று இறுதியில் கிடைக்கும் (அப்பம்)!

  • விண்மீன்களின் நிறங்கள்

    விண்மீன்களின் நிறங்கள்

    இரவு வானில் நாம் பார்க்கும் சிறிய புள்ளிகளாகத் தெரியும் விண்மீன்கள் எல்லாமே பொதுவாக மஞ்சள்-வெள்ளை நிறங்களில் தான் தெரிகிறது அல்லவா? சில பிரகாசமான விண்மீன்கள் மட்டும் வேறுபட்ட வண்ணங்களில் தெரியலாம். ஆனால் பெரிய தொலைநோக்கிகள் மூலம் அவதானிக்கும் போது எல்லா விண்மீன்களின் நிறங்களும் நமக்குத்…

  • விண்வெளிக்கு விண்”வெளி” என்று பெயர்வரக் காரணம் என்ன?

    விண்வெளிக்கு விண்”வெளி” என்று பெயர்வரக் காரணம் என்ன?

    பொதுவாக நமது சூரியத்தொகுதியைப் பற்றியோ, பால்வீதி, விண்மீன் பேரடைகள் மற்றும் பிரபஞ்சம் பற்றிய அளவுகளைப் பற்றி பேசும் போது, பலருக்கும் அது எவ்வளவு பெரியது என்பது உடனடியாகப் புரிவதில்லை, இதற்குக் காரணம் எமது பூமியில் நாம் இப்படியான மிகப் பாரிய தூரங்களை அன்றாட வாழ்வில்…

  • நடுவில் ஒரு அரக்கன்

    நடுவில் ஒரு அரக்கன்

    இந்தப் பிரபஞ்சம் பெரும்பாலும் வெறுமையானதுதான். நமது சூரியத்தொகுதிக்கு மிக அருகில் இருக்கும் விண்மீன், அண்ணளவாக 40 ட்ரில்லியன் கிலோமீட்டர்கள் தூரத்தில் இருக்கிறது. நாம் தற்போது வைத்திருக்கும் மிக வேகமாகச் செல்லக்கூடிய விண்கலத்தைப் பயன்படுத்தி அங்கு செல்லவேண்டுமென்றாலும் கிட்டத்தட்ட 80,000 வருடங்கள் எடுக்கும்.

  • பிரபஞ்ச அரக்கர்கள் பிறந்தது எப்போ?

    பிரபஞ்ச அரக்கர்கள் பிறந்தது எப்போ?

    தற்போது ஐரோப்பிய விண்வெளி ஆய்வுமையத்தின் UltraVISTA என்னும் கணக்கெடுப்பின் மூலம் பிரபஞ்சம் உருவாகி வெறும் 0.75 தொடக்கம் 2.1 பில்லியன் வருடங்களுக்குள் உருவாகியிருந்த பல விண்மீன் பேரடைகளை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

  • சாம்பி விண்மீன்களும் சூரியத் தொகுதியின் விதியும்

    சாம்பி விண்மீன்களும் சூரியத் தொகுதியின் விதியும்

    நமது சூரியனைவிடப் பாரிய விண்மீன்கள், அதாவது அண்ணளவாக நம் சூரியனைப் போல பத்துமடங்கு அல்லது அதனைவிடப் பெரிய விண்மீன்கள், தங்கள் வாழ்வை, சூப்பர்நோவா வெடிப்பாக முடித்துக் கொள்கின்றன.

பிரிவுகள்