விண்ணியல்

  • மீண்டும் உதித்த ரேடியோ பீனிக்ஸ்

    மீண்டும் உதித்த ரேடியோ பீனிக்ஸ்

    தங்கத்தால் ஆன உடலைக் கொண்ட இந்தப் பறவை நூற்றுக்கணக்கான வருடங்கள் வரை உயிர்வாழும். வயதுபோய் உடலெல்லாம் சோர்ந்து இறக்கும் தருவாயில், தீப்பற்றி எரிந்து சாம்பலாகிவிடும். பின்னர் அந்தச் சாம்பலில் இருந்து மீண்டும் இளமையாக உயிர்பெற்று வரும்.

  • பிரபஞ்ச மறுசுழற்சி: விண்மீன்களில் இருந்து ஒரு பாடம்

    பிரபஞ்ச மறுசுழற்சி: விண்மீன்களில் இருந்து ஒரு பாடம்

    மனிதர்களைப் போலவே, விண்மீன்கள் பிறந்து, வாழ்ந்து இறுதியில் இறக்கின்றன. இவை சூப்பர்நோவா வெடிப்பில் இறக்கும் போது, அவற்றினுள் புதிதாக உருவாகியிருந்த இரசாயன மூலக்கூறுகள் வெளியில் சிதறடிக்கப்படுகின்றன.

  • புளுட்டோவில் உயிரினம் இருக்குமா?

    புளுட்டோவில் உயிரினம் இருக்குமா?

    ஒருவேளை, புளுட்டோவின் மேட்பரப்பிற்கு கீழே, அதாவது உறைந்த பனிப் பாறைகளுக்கு கீழே திரவநிலையில் கடல் போன்ற அமைப்பு இருந்தால், நிச்சயம் அங்கு உயிரினம் இருக்க வாய்ப்பு உண்டு என்கிறார் பிரபல பிருத்தானிய இயற்பியலாளர் பிரைன் ஹாக்ஸ்.

  • பிரபஞ்ச அரக்கனுக்குள் இரண்டு கருந்துளைகள்

    பிரபஞ்ச அரக்கனுக்குள் இரண்டு கருந்துளைகள்

    குவாசார் (Quasar – quasi-stellar radio source) எனப்படுவது பிரபஞ்சத்தில் காணப்படும் பாரிய சக்திவாந்த பொருளாகும். குவாசார்கள் பில்லியன் கணக்கான விண்மீன்களைக் கொண்டுள்ள விண்மீன் பேரடைகளை விடப் பிரகாசமானவை.

  • விண்ணில் ஒரு வண்ணத்துப்பூச்சி

    விண்ணில் ஒரு வண்ணத்துப்பூச்சி

    இந்தப்படத்தில் இருப்பது இரட்டை ஜெட் நெபுலா. பார்க்க அதன் இருபுறமும் ஜெட் போல வாயுக்கள் பீச்சப்படுவதால் இதனை இப்படி அழைக்கின்றனர். சிலர் இதனை வானின் வண்ணத்துப்பூச்சி என்றும் அழைக்கின்றனர்.

  • தனிமையில் ஒரு விண்மீன் பேரடை

    தனிமையில் ஒரு விண்மீன் பேரடை

    பொதுவாக விண்மீன் பேரடைகள் எல்லாம் ஒன்றுகொன்று அருகில் ஒரு குழுவாகவே காணப்படும். உதாரணமாக நமது பால்வீதி உள்ளது உட்குழு (Local Group) எனப்படும் ஒரு தொகுதியில், அன்றோமீடா உள்ளடங்கலாக 57 முக்கிய விண்மீன் பேரடைகள் இதில் உண்டு.

  • வானில் ஒரு புதிய ஆச்சரியம்!

    வானில் ஒரு புதிய ஆச்சரியம்!

    நோவா எனப்படுவது ஒரு பாரிய விண்மீன் வெடிப்பாகும். இது குறித்த விண்மீனைப் பலமடங்கு பிரகாசமாக்கும். இந்தத் தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் தெரிவது Nova Vul என்கிற விண்மீன் வெடிப்பின் பின்னர் எஞ்சிய மிச்சமாகும்.

  • கருந்துளைக்கே சவால் விடும் சூப்பர் விண்மீன்

    கருந்துளைக்கே சவால் விடும் சூப்பர் விண்மீன்

    ஒரு தசாப்தத்திற்கும் மேலாக பீற்றுவிசையை உருவாக்குவதில் போட்டியில்லா சாம்பியனாக இருப்பது கருந்துளைகள். கருந்துளைகள் உருவாக்கும் பீற்றுவிசையை மற்றைய வான் பொருட்கள் உருவாக்கும் பலவீனமான பீற்றுவிசையோடு ஒப்பிட்டுப் பார்த்தால், இந்தப் பீற்றுவிசைகள் கருந்துளையினது போலலாமல் பூமியில் இருந்து பார்க்கும் அளவிற்கு பிரகாசமாக இருந்ததில்லை.

  • பிரபஞ்ச பெயர்ப் புதிர்

    பிரபஞ்ச பெயர்ப் புதிர்

    உங்களிடம் செல்லப்பிராணி எதாவது இருக்கிறதா? அப்படியிருந்தால் அதன் பெயர் என்ன? இப்போது உங்கள் செல்லப்பிராணி பத்துக் குட்டிகளைப் பெற்றெடுத்துள்ளது என்று வைத்துக்கொள்வோம். பிறந்த குட்டிகளை என்ன சொல்லி அழைப்பீர்கள்? அடுத்ததாக இந்தப் பத்துக் குட்டிகளும் பெரிதாகி ஒவ்வொன்றும் பத்துப் பத்துக் குட்டிகளைப் பெற்றெடுத்தால் அவற்றை…

பிரிவுகள்