Posted inவிண்ணியல்
இரண்டு அழகிகளின் கதை
ஹபிள் தொலைநோக்கி கோள்விண்மீன் படலங்கள் இரண்டின் அழகிய படங்களை எடுத்துள்ளது. இடப்பக்கத்தில் இருப்பது NGC 6302, இதனை பொதுவாக வண்ணத்துப்பூச்சி…
விண்மீன்கள் இயற்கையின் அற்புதங்களில் ஒன்று. பிரபஞ்ச அடுப்புகள் என்று அவற்றை நாம் கருதுவது தவறே இல்லை. மனிதனைப் போன்ற உயிரினங்கள் உருவாகக் காரணமான கார்பன், ஆக்சிஜன் போன்ற மூலகங்கள் இந்த விண்மீன்களின் மூலமே பிரபஞ்சத்திற்கு கொண்டுவரப்பட்டன.
நாம் இரவு வானைப் பார்க்கும் போது அதில் இருக்கும் ஒவ்வொரு சிறு மின்னும் புள்ளிகளும் மிகப்பெரிய வெப்பமான ஒளிரும் வாயுத்திரள் என்பதை நம்புவது அவ்வளவு எளிதல்ல. இதில் இருக்கும் மிகச் சிறிய விண்மீன் கூட பூமியை விடப் பலமடங்கு பெரியது. சூரியனைச் சுற்றிவரும் பூமியின் பாதையே தனக்குள் ஒழித்துக்கொள்ளக்கூடிய அளவிற்கு பாரிய விண்மீன்களும் உண்டு.