கவிஞர்.ஆ.மூ.சி.வேலழகன் அவர்களைப் பற்றி
கவிதை மட்டுமின்றி உரைச்சித்திரம், சிறுகதை, நாவல், ஆய்வு என பன்முகப்படுத்தப்பட்ட படைப்புகளில் தனது பெயரை இலங்கையில் மட்டுமின்றி பிற நாடுகளிலும் பொறித்துக்கொண்டிருக்கிறார். ஆ.மு.சி.வேலழகன்.
கவிதை நூலுக்கான (செங்காந்தள்) இலங்கை சாகித்திய விருது பெற்ற ஆதிநாராயணன் முத்துத்தம்பி வேல்முருகு (ஆ.மு.சி.வேலழகன்) இலங்கைப் போக்குவரத்துச் சபையில் சாரதியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 1972 முதல் இன்றுவரை 22 நூல்களை எழுதி வெளியிட்டுள்ள இவரது சாதனை ஆச்சரியப்படவேண்டியதுடன் கெளரவிக்கப்படவேண்டியதுமாகும்.
இவரின் படைப்புக்களுக்குக் கிடைத்த வெற்றிகளாக ஏலவே கூறப்பட்ட செங்காந்தள் நூலுக்காக சாகித்திய விருத, தமிழ்நாட்டின் அமைச்சரும் பேராசிரியருமான க.அன்பழகன் அவர்களால் காந்தி காமராஜ் மண்டபத்தில் 1996.05.09 ஆம் திகதி வழங்கப்பட்ட பொன்னாடைக் கௌரவம், கொழும்பில் “சிலோன் யுனைட்டட் ஸ்ரேஜ” நிறுவனத்தினரால் 12.09.1999 அன்று வழங்கப்பட்ட இலக்கியத்திற்கான விருது, 2003, 2004 இல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்களால் சான்றிதழ் வழங்கிக் கௌரவிக்கப்பட்டமை மற்றும் 2006 இல் இந்து சமய கலாசாரத் திணைக்களத்தினால் “கலாபூசணம்” விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டமை போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
அதுமட்டுமல்லாது அவரது நாவல்கள் சில பட்டப்படிப்புகளுக்காக பேராசிரியர்களால் ஆய்வுக்குட்படுத்தப் பட்டிருப்பதும் இவரது படைப்பின் தன்மையைப் பறைசாற்றுகின்றன. இவர் எழுதி வெளியிட்ட நூல்கள்….