கவிஞன் சஞ்சிகை

ஈழத்து இலக்கியச்சூழலில் கவிதை என்ற தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ஓரிரு சிற்றிதழ் வரிசையில் கவிஞன் சஞ்சிகையானது தனக்கென ஒரு இடத்தினைக் கொண்டுள்ளது.

ஆரம்ப காலங்களில் மாதமொரு இதழாக மலர்ந்த கவிஞன் பின்னர் காலாண்டிதழாக பரிமானமெடுத்து தனது 22 இதழ்களை உதிர்த்துள்ளது.

இலங்கையின் எழில் கொஞ்சும் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பிலிருந்து தெற்காக சுமார் 15 கிலாமீட்டர் தொலைவில் காணப்படும் புதுக்குடியிருப்பினை வசிப்பிடமாகக் கொண்ட சதாசிவம் மதன் என்பவரே இதன் ஆசிரியர். தாதிய உத்தியோகத்தராக அரசாங்க வைத்தியசாலை ஒன்றில் கடமையாற்றும் இவர் கவிதை துறைக்குள் தான் நுழைந்தது ஒரு விபத்து என்றும் பின்னர் அதைப் பற்றி ஆராய்ந்து கற்றுக் கொண்டதாகவும் குறிப்பிடுகின்றார்.

 சதாசிவம்  மதன்
சதாசிவம் மதன்
கவிஞன்  சஞ்சிகை
கவிஞன் சஞ்சிகை

நீங்களும் கவிஞன் சஞ்சிகையினை வாசிக்க கீழ்வரும் சுட்டியினை சொடுக்கவும்

http://www.kavignan.com/