நண்பன்

நண்பன்மீன்பெட்டியுடன் நண்பன், “எப்படி நலம்” என்றேன். “நெத்தலியும் சூடையும்” என்றான்.
சுளுக் என்றது, செவிப்புலனில் குறைவை மறந்தேன்.

அருகில் சென்று, அரசாங்கத் தொழில் மட்டும்தான் என்று இன்று இளைஞர் பலரும் பொழுதைப் போக்கும்போது நீ தனியாக சுயதொழிலில் இறங்கியது உன்னுடைய நண்பன் என்று என்னைச் சொல்ல பெருமை பொங்குகின்றது என்றேன்.

அவனும் மீண்டும் “ஏய் சூடை, நெத்தலி, திருக்கை…” எனத் தொடங்கினான்.

அமர்நாத் தவராஜா

படம் – இணையம்