புத்திமதி

image

ஒருவன் ஆற்றங்கரையிலே தூண்டிலில் மீன்பிடிக்கச் சென்றவன் அயர்ந்து தூங்கிவிட்டான். அவ்வழியிலே மதகுரு ஒருவர் வந்தார். வந்தவர் இவன் அயர்ந்து தூங்குவதைப் பார்த்ததும் அவனைத் தட்டி எழுப்பினார்.

ஒருவன் : ஏனய்யா என்ன எழுப்பினிங்க?
மதகுரு : நீ தூங்காமல் இருந்து நிரம்ப மீன் பிடிப்பாயானால் நிரம்ப பணம் சம்பாதிக்கலாமே.
ஒருவன் : நிரம்ப பணம் சம்பாதித்து என்னய்யா செய்யிறது?
மதகுரு : நிரம்ப பணம் இருந்தா ஒரு வள்ளம் வாங்கி இன்னும் உழைக்கலாம்?
ஒருவன் : வள்ளம் வாங்கி உழைச்சி என்னய்யா செய்யிற?
மதகுரு : கொஞ்ச நாள்ள பெரிய படகு வாங்கலாம்?
ஒருவன் : அத வாங்கி என்னய்யா செய்யிற?
மதகுரு : இன்னும் கொஞ்ச வருடங்கள் உழைச்சி பெரிய கப்பல் வாங்கி நன்றாக உழைக்கலாம்.
ஒருவன் : கப்பலை வாங்கி உழைத்து அதற்குப்பின் நான் என்னய்யா செய்யிற?
மதகுரு : என்ன இவ்வாறு கதைத்துக் கொண்டிருக்கிறாய்? நீ பலருக்கு வேலை வாய்ப்பளித்து ஒரு முதலாளியாக ஆறுதலாக இப்போது இருப்பது போன்று ஆறுதலாக ஆற்றங்கரையில் ஓய்வெடுக்கலாம்.
ஒருவன் (சினத்துடன்) : யோவ் என்னய்யா கதைக்கிற…அதத்தானே இப்ப செஞ்சித்து இருக்கன்…. சும்மா ஆறுதலா நித்திரை கொண்டவன எழுப்பி இன்னும் கனகாலம் கஸ்டப்பட்டு பிறகு ஆறுதலா ஓய்வெடுக்கட்டாம்.
மதகுரு இருந்த இடத்திலே அவரைக் காணவில்லை.
ஒரு சிங்களப் பத்திரிகையில் வந்த கதையின் மொழிபெயர்ப்பு இது.
படம் – இணையம்