செவ்வாயைப் பற்றி 10 விடயங்கள்

  1. சூரியனைச் சுற்றிவரும் கோள்களில் செவ்வாய் நான்காவது கோளாகும். அண்ணளவாக சூரியனில் இருந்து 228 மில்லியன் கிலோமீற்றர் தூரத்தில் சூரியனைச் சுற்றுகிறது.
  2. பூமியைப் போலவே, செவ்வாயும் தனது அச்சில் சுழல கிட்டத்தட்ட 24 மணிநேரங்கள் எடுக்கின்றது, ஆனால் சூரியனைச் சுற்றிவர 687 பூமி நாட்கள் எடுக்கின்றது.
  3. செவ்வாய் பூமியின் அளவில் பாதியளவு இருக்கும். இதன் விட்டம் 6778 கிலோமீற்றர்கள் ஆகும்.
  4. பூமியைப் போலவே செவ்வாயும் ஒரு பாறைக்கோளாகும். செவ்வாயின் மேற்பரப்பு, எரிமலை வெடிப்பு, விண்கற்களின் மோதல்கள் மற்றும், மேலோட்டு அசைவு, மற்றும் காலநிலை என்பனமூலம் மாற்றமடைந்துள்ளது.
  5. செவ்வாய்க்கு பூமியைவிட மெல்லிய வளிமண்டலம் உண்டு. அது பெரும்பாலும் காபனீர் ஒக்ஸ்சைடு, நைதரசன் மற்றும் ஆர்கன் போன்ற வாயுக்களால் ஆக்கப்பட்டுள்ளது.
  6. செவ்வாய்க்கு இரண்டு துணைக்கோள்கள் உண்டு. ஒன்று போபோஸ், மற்றயது டேய்மொஸ்.
  7. செவ்வாய்க்கு, சனியைபோல அதனைச் சுற்றி வளையங்கள் இல்லை.
  8. இதுவரை 40 இற்கும் மேற்பட்ட விண்கலங்கள், தரைஉளவிகள் செவ்வாய்க்கு அனுப்பப்பட்டுள்ளன. செவ்வாய்க்கு முதன் முதலில் வெற்றிகரமாக அனுப்பப்பட்ட விண்கலம் மாரினர் 4 ஆகும். இது 1965 இல் செவ்வாய்க்கு அனுப்பப்பட்டது.
  9. இப்போது இருக்கும் செவ்வாய், உயிர் வாழத் தேவையான காரணிகளைக் கொண்டு இல்லை. இறந்தகாலத்தில் செவ்வாயில் உயரினம் உருவாகத் தேவையான காலநிலை இருந்ததாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
  10. செவ்வாய், சிவந்த கிரகம் என அழைக்கப்படக் காரணம், செவ்வாய் மணலில் இருக்கும் இரும்புக் கனிமங்கள் துருப்பிடிப்பததனால் ஆகும். மற்றும் செவ்வாயில் இருக்கும் பாரிய புயல்கள் இந்த துருபிடித்த தூசுகளை கோள் முழுவதும் காவிச்செல்கிறது.