ஐரோப்பிய விண்வெளிக் கழகம், அழகான, எளிமையாக வழங்கும் வண்ணம் பிரபஞ்ச வரலாற்றில் முக்கியமான நிகழ்வுகளின் ஆரம்பக்கட்டங்களை தெளிவான தகவல்ப்படமாக தந்துள்ளது. பெருவெடிப்பில் தொடங்கி, அணுக்கள் உருவாகுவதில் இருந்து, நட்சத்திரங்கள், நட்சத்திரப் பேரடைகள் உருவாகுவது வரை மிகத் தெளிவாக காட்டப்பட்டுள்ளது.
பிரபஞ்சத்தின் 14 பில்லியன் வருட வரலாற்றின் சாரமாக இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது, அதுமட்டுமல்லாது, பிரபஞ்ச நுண்ணலை பின்புலக் கதிர்வீச்சு எப்படி உருவாகியது என்றும் காட்டுகின்றது.
அதை தமிழுக்கு மொழிபெயர்த்து இங்கு நான் உங்களுக்கு தந்துள்ளேன்.
கீழுள்ள படத்தை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான பெரிய படத்தைப் பார்க்கலாம்.
முளுப்பதிப்புரிமையும் ESA க்கே உண்டு.