நண்பர்களே! நீண்ட நாட்களாக செய்துவந்த முயற்சி இறுதியில் நிறைவுபெற்றுவிட்டது. சூரியத்தொகுதி மற்றும் அதனில் இருக்கும் அம்சங்களை இலகு தமிழில் விளங்கிக்கொள்ளக்கூடிய வண்ணம் ஒரு மின்நூலை தயாரிக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே இந்த “சூரியத்தொகுதி : ஒரு அறிமுகம்” என்னும் மின்னூல்.
சென்ற வருடத்தில் இருந்து மட்டக்களப்பு வானியல் கழகத்தில் மாணவர்களுக்கு என்னால் கற்பிக்கப்படும் சூரியத்தொகுதிக்கான அடிப்படைக் கைநூலாகவே இது ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டது. தற்போது எல்லோருக்கும் பயன்படும் வண்ணம் தமிழிலும் இதனை வெளியிடுகிறேன்.
தமிழில் அறிவியல் வளர்க்க ஆசைகொண்டுதான் இந்த பரிமாணம் தளமும் அதில் இருக்கும் அனைத்துக் கட்டுரைகளும் என்னால் எழுதப்பட்டுக் கொண்டிருகின்றது. சிலவேளிகளில் என்னை அறியாமல் எழுத்துப் பிழைகள் இருக்கலாம், அதனை தயவு செய்து பொறுத்துக்கொள்ளவும், அல்லது பின்னூட்டத்தில் குறிபிடுவதன் மூலம் நான் திருத்திக்கொள்வேன். இதை இங்கு சொல்வதற்கு காரணம், இந்த மின்புத்தகத்திலும் இப்படியான பிழைகள் இருக்கலாம், தயவு செய்து அதனைச் சுட்டிக்காட்டுவதன் மூலம், அதனைத் திருத்துவதற்கு நீங்களும் உதவலாம்.
மின்னூலைத் தரவிறக்க, கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
சூரியத்தொகுதி ஒரு அறிமுகம் – கோப்பின் அளவு 7 MB
ஒரு முக்கிய குறிப்பு: இந்தப் புத்தகத்தை நீங்கள் தாராளமாக உங்கள் நண்பர்களோடு பகிர்ந்துகொள்ளவோ, இதனை பிரிண்ட் செய்தோ பயன்படுத்திக்கொள்ளலாம். தயவுசெய்து இந்த மின்புத்தக்கோப்பில் எந்தவொரு மாற்றமும் செய்து அதனைப் பகிரவேண்டாம். உங்களுக்கு இந்தப் புத்தகத்தில் இருக்கும் தகவல்களில் சந்தேகம் வந்தால், தாராளமாக என்னைத் தொடர்புகொள்ளலாம், அல்லது பின்னூட்டத்தில் தெரியப்படுத்தலாம்.
சூரியத் தொகுதி பற்றி மேலும் பல கட்டுரைகளை நீங்கள் இங்கே பரிமாணம் தளத்தில் வாசிக்க முடியும். இங்கு கிளிக் செய்வதன் மூலம் உங்கள் சூரியத்தொகுதியைப் பற்றிய தேடலைத் தொடங்குங்கள்!
நன்றி,
சிறி சரவணா