2030 இற்கு முதல் விண்வெளி வீரர்களை நிலவிற்கு அனுப்ப ரஷ்யா திட்டமிட்டுள்ளது. இதற்கு ஆதரவளிப்பது மட்டுமல்லாது அந்தத் திட்டத்தில் ஐரோப்பிய விண்வெளிக் கழகமும் பங்குபெறும்.
1960 களில் அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியனிற்கு இடையில் space race எனப்படும் தொழில்நுட்ப போட்டிகாணப்பட்டது. ரஸ்சியாவின் முதலாவது செய்மதி ஸ்புட்னிக் தொடக்கம் நிலவில் காலடி பதித்த அமெரிக்க அப்பலோ வரை இந்த தொழில்நுட்ப போட்டி ஒரு கட்டத்தில் முடிவுக்கு வந்தது. ஆனால் தற்போது மீண்டும் அது மெல்லிதாகதுளிர்விடுகிறது என்று சொல்லலாம்.
மொஸ்கோவில் நடைபெற்ற தொழில்நுட்ப மாநாட்டின் போது, Roscosmos Energia வின் தலைவர், 2029 இல் ரஷ்சியா மனிதர்களை நிலவில் இறக்குவதற்கு திட்டமிட்டுள்ளது என்று கூறினார். Roscosmos Energia ரஸ்சியாவின் விண்வெளி ஆய்வுக்கழகமாகும்.
அதேபோல இந்தத் திட்டத்தில் ஐரோப்பிய விண்வெளிக்கழகமும் (ESA) பங்களிப்புச் செய்யும். கடந்த வருடத்தில் வெற்றிகரமாக ஒரு வால்வெள்ளியில் பீலி எனப்படும் தரையிரங்கியை ESA வெற்றிகரமாக தரையிறக்கியது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம்.
அதேபோல ஐரோப்பிய விண்வெளி வீரர்களை நிலவில் தரையிறக்க ஐரோப்பிய விண்வெளிக் கழகம் ஆர்வமாக இருப்பதாக, நிலவு ஆய்வுக் குழுவின் தலைமை ஆய்வாளர் Berengere Houdou தெரிவித்துள்ளார். இதுவொரு பல நாடுகளின் கூட்டு முயற்சியாக இருக்கும்.
நிலவில் நிரந்தர நிலையம் ஒன்றை அமைப்பதில் ரஷ்சியா மற்றும் ESA ஆர்வமாக இருப்பதை முன்கூட்டியே இவர்கள் வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். Luna 25 என்கிற தரையிரங்கியை நிலவின் தெற்குத் துருவப்பகுதிக்கு Roscosmos 2024 இல் அனுப்பிவைக்கும் என்று கடந்த மாதத்தில் Roscosmos அறிவித்தது. அங்கு இறங்கிய தரையிறங்கி அங்கு நிலையங்கள் அமைக்கக்கூடிய இடங்களை இனங்கண்டு தெரியப்படுத்தும்.
இந்த Lunar 25 திட்டம் உண்மையில் 1997 தொடங்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களுக்காக பின்தள்ளிப் போடப்பட்டுக்கொண்டே வந்தது. ஆனால் தற்போது ஐரோப்பிய விண்வெளிக் கழகத்தின் உதவியால், மீண்டும் உயிர்பெற்று உள்ளது எனக் கூறலாம்.
Lunar 25 தரையிறங்கியின் கட்டுமானப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப் பட்டுவிட்டது.
ஐரோப்பிய விண்வெளிக் கழகமும் ரஷ்சிய Roscosms உம் நிலவிற்கு மனிதர்களை அனுப்பத் திட்டமிட்டுள்ள அதேவேளை அமெரிக்காவின் NASA இன்னமும் ஆபத்தான திட்டத்தை செயப்படுத்த முனைகிறது. அதுதான் செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் திட்டம்.
நன்றி: sciencealert
மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள். தொடர்ந்து இணைந்து இருங்கள்.