நிலவையும் பூமியும் சேர்த்து ஒரே தடவையில் படம் பிடிப்பது என்பது அரிதே. அதற்குக் காரணம் பொதுவாக பூமியை படம் பிடிக்கும் செய்மதிகள் நிலவை படம் பிடிப்பதில்லை. ஆனால் நீங்கள் வீடியோவில் பார்ப்பது 25 வருடங்களுக்கு முன்னர் வியாழனை நோக்கி பயணித்த கலிலியோ விண்கலம் பூமியைப் பார்த்த படம். இந்த வீடியோ 52 நிறம் மெருகூட்டப்பட்ட படங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டது. வலப்பக்கத்தில் இருந்து சூரியன் ஒளிர பூமியும் நிலவும் பாதி தென்படுகின்றன.
நன்றி NASA, JPL, Galileo Project; Processing & License: Gordan Ugarkovic