நோக்கியா பெயரை வாங்கிய பிறகு பின்லாந்து HMD Global நிறுவனம் நோக்கியா ஸ்மார்ட்போன்களை அண்ட்ராய்டு இயங்குதளத்துடன் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடத்தில் நோக்கியா 6 மற்றும் நோக்கியா 8 ஆகிய போன்களை வெளியிட்ட HMD Global தற்போது அடுத்த வருடத்தில் நோக்கியா 9 போனை வெளியிடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சரி, வெளியாகிய நோக்கியா 9 இன் அம்சங்களை பார்க்கலாம்.
- Snapdragon 835 பிராசசர்
- LG தயாரித்த 5 இன்ச் OLED ஸ்க்ரீன்
- 12MP + 13MP இரட்டை பின்புறக் கமரா
- 5MP முன்பக்க கமரா
- 128GB உள்ளக சேமிப்பகம், மேலும் SD கார்ட் போடும் வசதியும் உண்டு
- 3250mAh பாட்டரி
RAM இன் அளவு தெரியவில்லை. ஆனால் அண்ட்ராய்டு 8.0 ஓரியோ பதிப்புடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.