உலகின் மிகப்பெரிய நீரிலும் நிலத்திலும் தரையிறங்கக்கூடிய விமானம்

எட்டு வருட தயாரிப்புக்கு பின்னர் உலகின் மிகப்பெரிய நீரிலும் நிலத்திலும் இருந்து பறக்ககூடிய விமானத்தை சைனா முதன்முதலில் வெற்றிகரமாக பறந்துள்ளது. AG600 என பெயரிடப்பட்ட இந்த விமானம் 3000 மீட்டார் உயரத்தில் பறந்து மீண்டும் எந்தவொரு பிரச்சினையும் இன்றி தரையிறங்கியுள்ளது.

38.8 மீட்டார் நீளம் கொண்ட இறக்கையும் 39.6 மீட்டார் நீளமான உடலையும் கொண்ட இந்த விமானம் அண்ணளவாக போயிங் 737 இன் அளவை ஒத்தது. உள்நாட்டு இடர்மீட்பு மற்றும் மிலிட்டரி பயன்பாட்டிற்கும் இதனை சைனா பயன்படுத்தப் போகிறது.

இந்த  விமானத் தயாரிப்பில் முக்கிய விடயம் 98%மான பகுதிகள் சைனாவிலேயே தயாரிக்கப்பட்டவை என்பதுதான். இது சைனாவின் விமானத் தயாரிப்பு தொழில்நுட்பத்தில் அடுத்த மைல்கல் என அந்நாட்டு தகவல் தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது.

உலகிலேயே மிகப்பெரிய நிலம்/நீர் இரண்டிலும் இயங்ககூடிய விமானத்தை அமேரிக்கா 1940 களில் உருவாக்கியது. அதன் 98 மீட்டார் நீள இறக்கையுடன் ஒப்பிட்டால் இந்த AG600 சிறியதுதான் ஆனால் Spruce Goose என செல்லமாக அழைக்கப்பட்ட அந்த விமானம் வெறும் 26 செக்கன்கள் மட்டுமே பறந்தது. தற்போது அந்த விமானம் மியுசியத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் சைனாவின் இந்த விமானம்தான் தற்போதைக்கு சம்பியன். கடலில் இரண்டு மீட்டார் அலை எழும்பும் போதும் கூட இந்த விமானத்தால் கடலில் தரையிறங்கவும் மீண்டும் பறக்கவும் முடியும் என்பது கூடுதல் தகவல்.