நிலவொளி இரவில் நீர் மேல்ப் பயணம்
மெல்லிய கோடுகளாய் நீர் கிழிய
தாலாட்டாய் ஓடும் படகே
உன் மடிமேல் என் தலையே
கண்மூடி உறங்கிப்போவேனோ நானே
தலைமுடியுள் நுழையும் உன் விரல்களாய்
பனிக்காற்று வருடும் நினைவுகளே
வண்ண வண்ணப் புள்ளிகளாய்
மின்னும் அந்த வைரங்கள்
வானமென்னும் சோலையிலே
உதிர்த்துவிட்ட ரத்தினங்கள்
அவை உன் கண்கள் எனக் கண்டேனே
அமைதியை நோக்கிய பயணம் தொடர
பொன் வண்டின் ரீங்காரம் காதினில் படர
தாயென உன்னை உணர்ந்தேனே
உன் உதடுகளின் மென்சிரிப்பே
காவிச்செல்கிறதே என்னை
முடிந்துவிட்ட நொடியில்
முடிவிலியில் புதைத்துவிட!
சிறி சரவணா
படம்: இணையம்