கூகிளின் புதிய குரோம் இணைய உலாவிக்கான Data Saver extension தற்போது குரோம் வெப் ஸ்டோரில் கிடைக்கிறது. இது உங்கள் பாண்ட்வித் பாவனையைக் குறைக்கப் பயன்படும் ஒரு இலவச extension ஆகும்.
தற்போது பீட்டா வெர்சனாக மட்டுமே வெளியிடப்பட்டுள்ள இந்த extension, SSL மற்றும் இன்கோக்னிட்டோ பக்கங்களில் தொழிற்படாது. அதாவது https எனத் தொடங்கும் தளங்களில் இது தொழிற்படாது. உதாரணம் பேஸ்புக், ஜிமெயில் போன்றன.
நீங்கள் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்துவிட்டால் மட்டும் போதும். மேலதிக செட்டிங்குகள் தேவையில்லை. நீங்கள் இணைப் பக்கங்களை பார்க்கும் போது, இது பின்னணியில் அவற்றை சுருக்கி டவுன்லோட் செய்யும் அளவைக் குறைக்கிறது. இதன்மூலம் உங்கள் பாண்ட்விட்த் சேமிக்கப்படும்.
மேலும் இது ஒவ்வொரு தளங்களுக்கும் ஏற்றாப்போல வேறுபட்ட அளவில் சுருக்குதல் செயல்முறையைச் செய்வதால், ஒவ்வொரு பக்கமும் வேறுபட்ட சுருக்கல் வீதத்தைக் கொண்டிருக்கும். சாதாரணமாக உங்களுக்கு இணையப் பக்கங்களில் எந்தவொரு வேறுபாடும் தென்படாது.
இந்த Data Saver தொழில்நுட்பம் ஏற்கனவே அண்ட்ராய்டு மற்றும் ஐஒஸ் இயங்குமுறைகளில் வேலைசெய்யும் குரோம் இணைய உலாவியில் காணப்படுகிறது. தற்போது இது கணனிகளுக்கும் கிடைக்கிறது.
பெரும்பாலும் 3G இணைய இணைப்பைப் பயன்படுத்துபவர்களுக்கு இது ஒரு நல்ல பயன்படக்கூடிய விடயமாக இருக்கலாம். ஆனால் பாரிய பிரோட்பான்ட் இணைய இணைப்புக்கள் வைத்திருப்பவர்களுக்கு பெரிதாக டேட்டா பாவனையில் எந்தவொரு பாரிய மாற்றமும் தெரிந்துவிடப் போவதில்லை.
இது தொழிற்படும் விதம் எப்படியென்றால், நீங்கள் ப்ரோ பக்கத்தைப் பார்க்க கூகிள் குரோமில் டைப் பண்ணினால், அது உடனே கூகிள் செர்வர்களுக்கு அனுப்பப்பட்டு, அங்கு அவற்றின் சைஸ் ஜிப் பைல்கள் போல சுருக்கப்பட்டு, மீண்டும் உங்கள் கணனியில் உள்ள கூகிள் குரோமில் காட்சிப் படுத்தப்படும்.
Data Saver தொழிற்படும் போது பின்வரும் மாறுதல்கள் உங்களுக்குத் தெரியலாம் என கூகிள் கூறுகிறது.
- சில இணையத்தளங்கள் GPS மூலம் உங்கள் இருப்பிடத்தைக் கண்டறிய முடியாமல் போகலாம்.
- சில படங்கள் கொஞ்சம் தெளிவில்லாமல் இருக்கலாம்.
- Intranet இணையத்தளங்கள் சிலவேளைகளில் லோட் ஆகாமல் போகலாம்.
- மொபைல் போன் இணையத் தளங்கள், அதாவது உங்கள் பாவனை மற்றும் பில் போடும் தளங்கள் சில பிரச்சினைகளைக் கொடுக்கலாம்.
எப்படியோ இந்த extension ஐ முயற்சித்துப் பார்ப்பதில் தவறில்லை.
நன்றி: omgchrome
மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள். தொடர்ந்து இணைந்து இருங்கள்.