மாதம்: ஆகஸ்ட் 2018

மோரிஸ் வோர்ம் : இணையத்தை நிறுத்திய மால்வேர்!

கணணியில் உள்ள கெட்ட பசங்களுக்கு பல பெயர்கள் உண்டு. மால்வேர் என்கிற வகையறாவில் வரும் இவை அனைத்தும் வைரஸ், வோர்ம், ரூட்கிட், ஸ்பைவேர், ட்ரோஜான்ஹோர்ஸ் என பலவகைப்படும்.

இயற்கையின் இசை

தோட்டத்து குயிலிசை கேட்டேன் அது வந்த திசையினை தேடித் திரிந்தேன் நெஞ்சம் மயக்கிடும் கானம், அது குயிலின் வழி இந்த

சிறுகோளில் சுரங்கம் தோண்டும் ஹயபூசா 2

இந்த விண்வெளியில் உலாவும் டையமண்ட் கல்லின் மதிப்பு 80 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று கணக்கிட்டுள்ளனர். வடிவம் தான் டையமண்ட், ஆனால் இந்த 162173 Ryugu சிறுகோள் பெரும்பாலும் நிக்கல் மற்றும் இரும்பால் உருவாகியுள்ளது. பல காரணங்களுக்காக எமக்கு இந்த சிறுகோளில் ஆர்வமுண்டு.

மோதும் விண்மீன்கள் வெளியேற்றும் கதிரியக்க கழிவுகள்

கதிரியக்க கழிவுகளைப் பற்றி நாம் கேள்விப்பட்டுள்ளோம். அது எவ்வளவு ஆபத்தானது என்றும் எமக்குத் தெரியும். சாதாரண டாக்டராக இருந்தவரை ‘ஹல்க்’ ஆக மாற்றியது கதிரியக்கம் தானே! உண்மையில், கதிரியக்கம் என்பது அணுத்துணிக்கைகள் அல்லது மூலக்கூறுகள் வெளியேற்றும் ‘கதிர்வீச்சு’ எனப்படும் சிறிய துணிக்கைகள் அல்லது சக்தி ஆகும்.

சூரியத் தொகுதியைப் பற்றி ஒரு வேகப்பார்வை

சூரியனை மையமாகக் கொண்டு சுற்றிவரும் பல விண்வெளிப் பொருட்களை உள்ளடக்கியது இந்த சூரியத் தொகுதி. பூமி போல கோள்கள், விண்கற்கள், சிறுகோள்கள், துணைக்கோள்கள், வால்வெள்ளிகள், சிறுகோள் பட்டி, கைப்பர் பெல்ட், ஊர்ட்மேகம் இப்படி பல அம்சங்கள் நிறைந்தது இது. இந்தப் பகுதியில் சூரியத் தொகுதியில் இருக்கும் முக்கிய ஆசாமிகளைப் பற்றி வேகமாக பார்க்கலாம் வாருங்கள்.

முதுகெலும்பில் விபத்து ஏற்பட்டவர்களை காப்பாற்றும் 3Dயில் அச்சிடப்பட்ட நரம்புக் கலங்கள்

மினிசோட்டா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் விபத்தின் பின்னர் முள்ளந்தண்டு வடத்தை மீண்டும் இணைக்கும் கருவியை உருவாகியுள்ளனர். சிலிக்கன் பசைக்குள்ளே 3D யில் பிரிண்ட் செய்யப்பட்ட நரம்புக் குருத்தணுக்கள் இருகின்றன. விபத்து ஏற்பட்ட இடத்தில் இதனை பூசுவதன் மூலம் உடைந்த நரம்புக் கலங்களின் இடையே மீண்டும் இணைப்பை வளர்க்கும் பாலமாக இது தொழிற்படும்.

டைட்டானிக்கின் கதையை சைலண்டாக முடிக்கும் பக்டீரியாக்கள்

கடலில் மூழ்கிய எல்லாமே ஒரு கட்டத்தில் கடலோடு கடலாகிவிடவேண்டும் என்பது இயற்கையின் நியதிதான். ஏப்ரல் 15, 1912 இல் அட்லாண்டிக் கடலில் மூழ்கிய புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலின் கதையும் அதுதான் என்பது நாமறிந்தது தான். ஆனாலும் டைட்டானிக் கப்பலின் எச்சத்தை வரலாற்றில் இருந்து எடுத்துவிட ஒரு குழு மும்முரமாக வேலை செய்கிறது!

முடிச்சு அவிழ்க்கப்பட்டது : பிளாசார் பேரடைகளில் இருந்து வரும் மர்மத் துகள்கள்

பூமியின் தென் துருவம் மிக ஆபத்தான ஒரு சூழல். வெப்பநிலை -80 பாகை செல்சியஸ் வரை செல்லக்கூடிய உறைந்த பாலைவனம். ஆனாலும் அங்கே விஞ்ஞானிகள் கடந்த எட்டு ஆண்டுகளாக கூடுகின்றனர். ஏனென்றால் இயற்கையின் ஒரு முக்கிய மர்மத்தை அவிழ்க்கும் முடிச்சு அங்கேதான் இருக்கிறது

செவ்வாயில் திரவ நிலையில் நிலத்தடி நீர்?

செவ்வாயின் மேற்பரப்பிற்கு ஒரு மைல் ஆழத்தில் திரவ நிலையில் நீரைக் கொண்ட ஏரி ஒன்றினை மார்ஸ் எக்ஸ்பிரஸ் எனும் செய்மதி கண்டறிந்துள்ளது. மார்ஸ் எக்ஸ்பிரஸ் நிலத்தை ஊடுருவிப் பார்க்கும் ரேடார் கருவி கொண்டு இந்த நிலத்தடி ஏரியைக் கண்டறிந்துள்ளது. அண்ணளவாக 20 கிமீ நீளமான இந்த ஏரியின் ஆழம் கிட்டத்தட்ட ஒரு மீட்டருக்கும் சற்றே அதிகம் என்று இதன் தரவுகள் தெரிவிக்கின்றன.