கியூட்டான T.Rex டைனோசர் – ஜுராசிக் பார்க் கால கற்பனைகள் சிதைந்ததா?!

நாம் ஜுராசிக் பார்க் படத்தில் பார்த்து பயந்த அந்த கொடூரமான வில்லன் டைனோசர் – T.Rex எப்படி உண்மையில் இருந்திருக்கும் என்று கிடைத்த எலும்புகளை வைத்து விஞ்ஞானிகள் புதுப் புது முறைகள் மூலம் உருவத்தைக் காலப்போக்கில் கணித்துக்கொண்டே வந்துள்ளனர்.

தொண்ணூறுகளில் வந்த ஜுராசிக் பார்க் படத்தில் வந்தது போல T.Rex இருந்திருக்க வாய்ப்பில்லை என்று இரண்டாயிரம் ஆண்டளவில் வெளிவந்த முடிவுகள் கூறின. அதாவது முதலை போல கனமான தோல் இல்லாமல் பூனை போல முடிகள் இந்த கொடூரனுக்கு இருந்திருக்கவேண்டும் என்பதே அந்த முடிவுகள். ஆனாலும் அந்தக் கணிப்பிலும் வீரமான, கொடூரமான உருவம் கொண்ட உயிரினமாகத்தான் T.Rex கருதப்பட்டது

ஆனால் தற்போது புதிய உத்திகளைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் உருவாகியுள்ள உருவம், இதுவரை நாம் உருவாக்கிய T.Rex இன் உருவங்களில் மிக துல்லியமானது என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த உருவத்தின் அடிப்படையில் T.Rex பார்க்க மிக சதைப்பற்றாக, பொலிவான தோலுடன் வலம்வந்துள்ளது!

ஏற்கனவே கருதப்பட்ட உருவ அமைப்பிற்கும் தற்போது உருவாக்கப்பட்டிருக்கும் உருவ அமைப்பிற்கும் இடையில் இருக்கும் பெரிய வித்தியாசம் தற்போதைய உருவத்தில் முடிகள் இல்லாததே. விஞ்ஞானிகள் T.Rex இன் தோலில் முடிகள் இருந்திருக்க வாய்ப்பில்லை என்ற முடிவுக்கே வந்துள்ளனர்.

நாம் ஒன்றி தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். 66 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் உலகை ஆட்சி செய்த இந்த டைனோசர்களை அதன் எலும்புகளை மட்டுமே வைத்துக்கொண்டு மீண்டும் முழு உருவமாக வடிவமைப்பது என்பது அவ்வளவு இலகுவான காரியமில்லை. எலும்புப் புதைபடிவங்களை துல்லியமாக ஆராய்வதில் தொடங்கி, கற்பனைக் குதிரையை தட்டிக்கொடுப்பது வரை மிகக் கடினமான வேலை இது.

மேலும் ஒரு தகவல்: இந்த புதிய உருவத்தை உருவாக்க அண்ணளவாக 320 மணித்தியாலங்கள் எடுத்துள்ளது!


#parimaanam #sciencepanda

⚡ கட்டுரைகள் பயனுள்ளதாக இருந்தால் ஒரு லைக்கும் போட்டுவிட்டு போகவும்.😎😎

https://parimaanam.net

https://www.facebook.com/parimaanam

⚡ இலவச மின்னூல்கள் >>> https://parimaanam.net/category/downloads/ebooks/