இது காலம்காலமா இருக்கிற பிரச்சினை தான். ஏதாவது பைலை காப்பி பண்ணிட்டு USB drive ஐ safely remove பண்ணிட்டுத்தான் USB port ல இருந்து கழட்டனுமா இல்லையா என்று பலர் என்னிடமே கேட்டுள்ளனர். இந்தக் கேள்வியில் இருக்கும் உள்ளர்த்தம் அப்படி saefly remove செய்யாவிட்டால் USB drive பழுதாகிவிடுமா என்பதுதான்.
உண்மையிலே இந்த safely remove என்பது USB drive இல் இருக்கும் டேட்டாவைப் பற்றியது தான். திடீரென USB drive ஐ கழட்டுவது என்பது தகவல் இழப்புக்கு காரணமாகலாம், சில வேளைகளில் ப்ரோக்ராம் கிராஷ் ஆகவும் வாய்ப்புள்ளது. பழைய இயங்குமுறை என்றல் அதுவும் செயலிழக்க வாய்ப்புள்ளது. இதை வாசிக்கும் யாராவது விண்டோஸ் 95, 98 ஐ பயன்படுத்தி இருந்தால் நான் என்ன சொல்கிறேன் என்று புரியும். ஆனால் தபோதைய இயங்குமுறைகள் பல வழிகளில் முன்னேற்றமடைந்துவிட்டன. எனவே USB drive களை திடீரென கழட்டுவது அவற்றை செயலிழக்க வைத்துவிடாது, மாறாக நீங்கள் USB drive இற்கு காப்பி செய்த டேட்டாவை பாதித்துவிடும்.
விரிவாக பார்ப்போம்.
இயங்குமுறை தான் கணனியில் இருக்கும் கோப்புகள் (பைல்கள்) எல்லாவற்றின் வாசித்தல், எழுதுதல் நடவடிக்கைகளை செய்யும். எனவே ஒரு ப்ரோக்ராம் ஹர்ட்டிஸ்க் அல்லது USB drive இல் இருக்கும் ஒரு பைலை வாசிக்கவோ அல்லது அந்த பைலில் எழுதவோ விரும்பினால் இயங்குமுறைக்கு தனது விருப்பத்தை தெரிவிக்கும்.
இயங்குமுறை குறித்த பைலை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ப்ரோக்ராம் இற்கு கொடுக்க முடியும் என்றால் அதனைக் கொடுக்கும். சிலவேளை வேறு ப்ரோக்ராம் அந்த பைலை பயன்படுத்திக் கொண்டிருந்தால் பைலை கேட்ட ப்ரோக்ராம்க்கு அதனைக் கொடுக்க முடியாது என்று தகவல் தெரிவிக்கப்படும். ஒழுங்காக குறித்த ப்ரோக்ராம்மில் இந்த நிலையைக் குறித்து ப்ரோக்ராம் செய்யப்பட்டிருந்தால் ஓகே, இல்லாவிடில் அந்த ப்ரோக்ராம் செயலிழக்க வாய்ப்புண்டு. சில வேளைகளில் அந்த ப்ரோக்ராம் இயங்குமுறைக்கு அவசியமானது என்றால், சிஸ்டம் முழுதாக செயலிழக்கவும் கூடும்.
தற்போதைய புதிய இயங்குமுறைகளில் இப்படியான நிகழ்வுகளை நீங்கள் அதிகம் பார்த்திருக்க முடியாது, அதற்குக் காரணம் மேம்பட்ட பைல் சிஸ்டம் மற்றும் அதனைக் கையாளும் முறையும் தான்.
எப்படி இருப்பினும் USB driveகளை பொறுத்தவரையில் அதனை வேலு சுலபமாக கழட்டிவிட முடியும் என்பதால் தகவல் இழப்பை தடுக்கவே Safely Remove போன்ற ஆப்சன்கள் இயங்குமுறைகளில் காணப்படுகின்றன.
ஒரு பைலை இயங்குமுறை குறித்த ஒரு ப்ரோக்ராம் ஒன்றிற்கு அணுக வழங்குகிறது என்று வைத்துக்கொண்டால், இயங்குமுறை அந்த பைல் நிலையான ஒரு இடத்தில் இருக்கும் என்ற நம்பிக்கையில் தான் தொழிற்படும். எனவே திடீரென USB drive ஒன்றை நீக்குவது அந்த USB drive இல் இருக்கும் தகவல் இழப்பு, பைல் சிஸ்டம் கரப்ட் ஆகுதல், ப்ரோக்ராம் செயலிழத்தல் போன்ற நிலைக்கு ஆளாக்கும்.
மேலும், மிக முக்கியமான பிரச்சினை நீங்கள் பைல் ஒன்றை USB drive இற்கு காப்பி செய்தால் உடனடியாக இயங்குமுறை அதனை காப்பி செய்துவிடாது. சிஸ்டத்தை வினைத்திறனாக கையாள இயங்குமுறைகள் Write Cache எனும் நுட்பத்தை பயன்படுத்துகின்றன. இந்த Write Cache எனப்படுவது யாதெனில், நீங்கள் பைலை காப்பி செய்யத் தொடங்கியவுடன் உண்மையில் அது உங்கள் USB drive இற்கு காப்பி செய்யாமல், கணனியின் நினைவகத்திற்கே காப்பி செய்யும், பின்னர் அதற்கு ஏதுவான நேரம் எதுவோ, உதாரணமாக வேறு சில பைல்களும் காப்பி செய்யப்படவேண்டும் என்றால் அவற்றையும் ஒன்று சேர்த்து பின்னர் உங்களுக்குத் தெரியாமலேயே அது USB drive இல் காப்பி செய்கிறது.
ஆனால் உங்கள் கணினியின் திரையில் குறித்த பைல்கள் ஏற்கனவே USB drive இல் இருப்பது போல காட்டப்படும், ஆனால் நீங்கள் USB Drive ஐ கழட்டி வேறு ஒரு கணனியில் சொருகிப் பார்க்கும் போது அங்கே குறித்த பைல்கள் இருக்காது. ஐ! பச்சை கலர் ஜிங்குசா, மஞ்சள் கலர் ஜிங்குசா, எனக்கே இது நிறையவாட்டி நடந்திருக்கு ஜிங்குசா!
இப்படியான சிக்கல்கள் வரக்கூடாது என்பதற்குத்தான் இயங்குமுறைகள் Safely Remove ஆப்சனைக் கொண்டுள்ளன.
Safely Remove கட்டளையின் போது என்னவெல்லாம் நடக்கும் என்று பார்க்கலாம்!
Safely Remove என்பது ஒரு கட்டளையாக இருந்தாலும், உள்ளே பல ரூபங்களாக வேலைகளை செய்துவிடுகிறது இந்தக் கட்டளை, அதனால் தான் அதற்கு சிலவேளை சில பல செக்கன்கள் கூட எடுக்கும்.
- Write Cache இல் இருக்கும் அனைத்தையும் குறித்த drive இல் எழுதிவிடும்.
- அடுத்து இயங்கிக்கொண்டிருக்கும் அனைத்து ப்ரோக்ராம்களுக்கும் குறித்த USB drive கழட்டப்படப் போவதாக தகவல் ப்ரோட்காஸ்ட் செய்யப்படும். (இந்த செய்தியை செவிமெடுக்கக்கூடிய ப்ரோக்ராம்கள் அதற்குத் தகுந்தாற்போல் நடவடிக்களைகளை மேற்கொள்ளும்.)
- சிலவேளை USB drive ஐ பயன்படுத்திக்கொண்டு இருக்கும் ப்ரோக்ராம், அல்லது ப்ரோக்ராம்கள் மேலே அனுப்பபட்ட செய்திக்கு செவிசாய்க்காமல், தொடர்ந்து USB drive ஐ பயன்படுத்திக்கொண்டிருந்தால் உங்களுக்கு USB drive ஐ கழட்டமுடியாதுள்ளது என்று செய்தி வரும்.
புதிய இயங்குமுறைகள் தகவலை பாதுகாக்க பல புதிய உத்திகளை கையாளுகின்றன. Windows ஐ பொறுத்தவரையில் Optimise for Quick Removal ஆப்சன் மூலம், பைலை USB drive இற்கு காப்பி செய்யும் போது உடனடியாக அதனில் எழுதிவிடும் படி செய்துவிட முடியும். இதனால் நீங்கள் Safely Remove செய்யாமல் USB drive ஐ கழட்டினால் கூட தகவல்கள் USB drive இல் இருக்கும். Windows இல் இந்த ஆப்சன் தான் பொதுவாக செயற்பாட்டில் இருக்கும் என்பது கூடுதல் தகவல்.
எப்படி இருப்பினும், Safely Remove ஒரு நல்ல விடையமே. Safely remove செய்வதாலோ அல்லது செய்யாமல் விடுவதாலோ உங்கள் USB drive இற்கு எந்த பாதிப்பும் வரப்போவதில்லை. அது உங்களின் தரவுகளை மட்டுமே பாதிக்கும். சிலவேளை ப்ரோக்ராம் செயலிழத்தல் மற்றும் சிஸ்டம் கிராஷ் ஆகுதல் என்பவற்றில் இருந்தும் பாதுகாக்கும்.
தகவல்கள்: Phillip Remaker @ Quora, Quora, Wikipedia
⚡ #parimaanam #sciencepanda
⚡ கட்டுரைகள் பயனுள்ளதாக இருந்தால் ஒரு லைக் போடவும்! அதற்கும் மேலே என்றால் ஷேர் செய்யலாமே!
⚡ https://parimaanam.net
⚡ https://www.facebook.com/parimaanam
⚡ இலவச மின்னூல்கள் >>> https://bit.ly/parimaanam-books