உயிரினம் 1 : பயணம் தொடங்கட்டும்

மனித மூளை, இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் மிகச் சிக்கலான அமைப்புக்களில் ஒன்று என்று கூறினால் மிகையாகாது. நமது மூளையில் அண்ணளவாக 86 பில்லியன் நியுரோன்கள் உள்ளது என 2009 இல் ஒரு குழு ஆய்வுசெய்து முடிவை வெளியிட்டுள்ளது. நமது சூரியத் தொகுதி இருக்கும் விண்மீன் பேரடையான “பால்வீதி”யில் அண்ணளவாக 200 – 400 பில்லியன் விண்மீன்கள் இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

மின்காந்த அலைகள் 7: புறவூதாக் கதிர்கள்

புறவூதாக் கதிர்கள், கட்புலனாகும் ஒளியின் அலைநீளத்தைவிடக் குறைவான அலைநீளத்தைக் கொண்டவை. மனிதக் கண்களுக்கு புலப்படாத மின்காந்த அலையாக இருப்பினும் சில பூச்சிகள், பறவைகள் மற்றும் தேனிக்களால் இவற்றை பார்க்க அல்லது உணரமுடியும். மேலும் குறிப்பிட்ட சூழலில் குழந்தைகளால் அல்லது இளம் மனிதர்களால் கூட புறவூதாக் கதிர்களை பார்க்கக்கூடியதாக இருக்கும்.

மின்காந்த அலைகள் 6: கட்புலனாகும் ஒளி

மின்காந்த அலைகள் எல்லாமே ஒளிதான், ஆனால் மொத்த மின்காந்த அலைகளின் நிறமாலையில் மிகச் சிறிய அளவையே எமது கண்களால் உணர முடியும், மின்காந்த அலைகளின் இந்தப் பகுதியே கட்புலனாகும் ஒளி, அல்லது வெள்ளொளி என அழைக்கப்படுகிறது.

மின்காந்த அலைகள் 5: அகச்சிவப்புக் கதிர்கள்

அகச்சிவப்புக் கதிர்கள் நுண்ணலைகளை விட அலைநீளம் குறைந்த அலைகளாகும். மனிதக் கண்களால் பார்க்க முடியாத இந்த அலைகள் கண்டறியப்பட்ட விதமே சற்று விசித்திரமானது. இந்த அலைகளுக்கு “அகச்சிவப்பு” என பெயர் வரக்காரணம், இந்த அலைகள், கட்புலனாகும் அலைகளின் சிவப்பு நிற அலைகளுக்கு அப்பால் இருப்பதாலாகும்.

3.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் இருந்த குளிர்ச்சியான சமுத்திரங்கள்

3.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் இருந்த சமுத்திரங்கள், உயிரினங்கள் உருவாக முடியாதளவு மிக வெப்பமாகக் காணப்படவில்லை மாறாக, மிகவும் குளிராகக் காணப்பட்டன. மேலும் இந்தக் குளிரான காலப்பகுதி அண்ணளவாக 30 மில்லியன் வருடங்களுக்கு நீடித்துள்ளது.

மின்காந்த அலைகள் 4: நுண்ணலைகள்

நுண்ணலைகள், ரேடியோஅலைகளை விட அலைநீளம் குறைந்தவை, அதாவது ரேடியோ அலைகளின் அலைநீளம் கொஞ்சம் கொஞ்சமாக குறைவடைந்து வரும்போது, அது ஒரு கட்டத்தில் நுண்ணலைகளாக மாறிவிடும். இது ரேடியோ அலைகளின் அலைநீளத்திற்கு மிக அருகில் இருந்தாலும் தனியான தனியான அலைக்கற்றை வடிவமாகவே கருதப்பட்டு, நுண்ணலை என்று பெயரிடப்பட்டுள்ளது.

மின்காந்த அலைகள் 3: ரேடியோ அலைகள்

எழுதியது: சிறி சரவணா கடந்த பதிவுகளில் மின்காந்த அலைகள் பற்றியும் அவற்றின் பண்புகள் பற்றியும் பார்த்தோம். அவற்றை நீங்கள் வாசித்திராவிட்டால் இதோ கீழே உள்ள இணைப்புக்களை கிளிக் செய்து அவற்றைப் படித்துவிடுங்கள். மின்காந்த அலைகள் 1...

பலதும் பத்தும் 2 : ப்ளுட்டோ, சுறாமீன்கள், சூரிய நடுக்கம்

எழுதியது: சிறி சரவணா கடந்த வாரத்தில் அறிவியல் உலகில் இடம்பெற்ற சுவாரஸ்யமான நிகழ்வுகளின் தொகுப்பு. ப்ளுட்டோவை நெருங்கிக்கொண்டிருகிறது நாசாவின் New Horizons நாசாவின் New Horizons என்ற ஆளில்லா விண்கலம் தற்போது ப்ளுட்டோவை நெருங்கிக்கொண்டு இருக்கிறது. ஜூலை...

மின்காந்த அலைகள் 2 : பண்புகள்

எழுதியது: சிறி சரவணா சென்ற பாகத்தில் மின்காந்தஅலைகள் என்றால் என்ன? மற்றும் அவற்றின் பிரிவுகள் என்பன பற்றிப் பார்த்தோம். இந்தப் பகுதியில் மின்காந்தஅலைகளின் பண்புகளைப் பற்றிப் பார்க்கலாம். மின்காந்த அலைகள் 1 : அறிமுகம் மின்காந்தஅலைகளில் பல்வேறு...

மின்காந்த அலைகள் 1 : அறிமுகம்

எழுதியது: சிறி சரவணா இன்று நாம் பயன்படுத்தும் பெரும்பாலான இலத்திரனியல் சாதனங்கள், உதாரணமாக உங்கள் செல்போன் தொடக்கம், டிவி ரிமோட் வரை மின்காந்த அலைகள் உங்கள் கண்களுக்குத் தெரியாமல், உங்கள் கட்டளைகளை நிறைவேற்றிக்கொண்டுதான் இருக்கின்றன....