சூரியனைச் சுற்றிவரும் 7வது கோள் யுரேனஸ் ஆகும். இது சூரியனை 2.9 பில்லியன் கிலோமீற்றர்கள் தூரத்தில் சுற்றி வருகிறது. (19.19 AU)
யுரேனசில் ஒரு நாள் என்பது 17 மணித்தியாலங்கள் ஆகும். அதேபோல சூரியனை ஒரு முறை சுற்றிவர 84 வருடங்கள் எடுக்கின்றது.
இது ஒரு ‘பனி அரக்கன்’ வகைக் கோளாகும். அதாவது இந்தக் கோளானது ‘பனி’யால் ஆன மூலப்பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது நீர், மெதேன் மற்றும் அமோனியா.
பாறையால் ஆனா சிறு மையப்பகுதி, யுரேனசுக்கு உண்டு.
யுரேனசின் வளிமண்டலம் பெரும்பாலும் ஐதரசன், ஹீலியம் மற்றும் சிறிதளவு மெதேன் வாயுக்களால் ஆக்கப்பட்டுள்ளது.
யுரேனசுக்கு 27 துணைக்கோள்கள் உண்டு. இவற்றின் பெயர்கள், வில்லியம் ஷேக்ஸ்பியர், மற்றும் அலக்ஸாண்டர் போப் எழுதிய கதைகளில் வரும் பாத்திரங்களின் பெயர்களாகும்.
யுரேனசுக்கும் சிறிய, மெல்லிய வளையங்கள் உண்டு.
இதுவரை யுரேனசுக்கு அருகில் சென்ற ஒரே விண்கலம் வொயேஜர் 2 மட்டுமேயாகும்.
யுரேனசில், நாமறிந்து உயிர் வாழத்தேவையான காரணிகள் எதுவும் இல்லை.
வெள்ளிக் கோளைப் போல, கிழக்கில் இருந்து மேற்காக சுற்றும் மற்றைய ஒரே கோள் இந்த யுரேனஸ், ஆனாலும் இது மற்றைய கோள்களைப் போல நிலைக்குத்தாக சுழலாமல், கிடையாக சுழல்கிறது.