- சூரியனைச் சுற்றிவரும் 8ஆவது கோள் நெப்டியூன் ஆகும். அண்ணளவாக சூரியனில் இருந்து 4.5 பில்லியன் கிலோமீற்றர்கள் (30 AU) தொலைவில் சூரியனைச் சுற்றுகிறது.
- நெப்டியூன் தன்னைத்தானே சுற்ற 16 மணிநேரங்கள் எடுக்கிறது, அதேபோல சூரியனை ஒருமுறை சுற்றிவர 165 பூமி வருடங்கள் எடுக்கிறது.
- யுரேனசைப் போல நெப்டியுனும் ஒரு ‘பனி’ அரக்கனாகும். இது பெரும்பாலும் நீர், அமோனியா மற்றும் மெதேன் ஆகிய மூலக்கூறுகளால் ஆக்கப்பட்டுள்ளது.
- நெப்டியுனின் மையப்பகுதியில் பூமியளவுள்ள பாறைக்கோளம் இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
- நெப்டியுனின் வளிமண்டலம், ஐதரசன், ஹீலியம் மற்றும் மெதேன் ஆகிய வாயுக்களால் ஆக்கப்பட்டுள்ளது.
- நெப்டியுனுக்கு 13 உறுதிசெய்யப்பட்ட துணைக்கோள்கள் உண்டு. இவற்றுக்கு, கிரேக்க நீர்க் கடவுள்களின் பெயர்களே வைக்கப்பட்டுள்ளன.
- நேப்டியுனுக்கும் சனியைப் போலவே அதனைச் சுற்றி ஆறு வளையங்கள் உண்டு.
- யுரேனசைப் போலவே, நெப்டியுனுக்கும் அருகில் சென்ற ஒரே விண்கலம் வொயேஜர் 2 மட்டுமே.
- நெப்டியுனில் நாமறிந்த உயிர் வாழத் தேவையான காரணிகள் இல்லை.
- புளுட்டோ, சூரியனில் இருந்து நெப்டியுனைவிட மிகத் தொலைவில் சுற்றினாலும், சில வேலைகளில், அது நேப்டியுனை விட சூரியனுக்கு அருகில் செல்கிறது, இதற்கு காரணம், புளுட்டோவின் நீள்வட்டப் பாதையே.