விண்ணியல்

  • எது முதலில் சுழற்சியை நிறுத்தும்? ஒரு விண்மீனா அல்லது பிஜ்ஜெட் ஸ்பின்னரா?

    எது முதலில் சுழற்சியை நிறுத்தும்? ஒரு விண்மீனா அல்லது பிஜ்ஜெட் ஸ்பின்னரா?

    விண்ணியலில் ஒரு பொருளின் சுழற்சிக்கான இயற்பியல் தத்துவங்கள் மிக முக்கியமானது, காரணம் பிரபஞ்சத்தில் இருக்கும் அநேக பொருட்கள் சுழல்கின்றன. உதாரணமாக பூமி தன்னைத்தானே ஒரு அச்சில் சுழல்கிறது. சூரியன் பால்வீதியின் மையத்தைச் சுற்றி சுழன்றுகொண்டிருக்கிறது, மேலும் பிரபஞ்சத் தூசுகள் புதிய விண்மீன் ஒன்று உருவாகும்…

  • பிரபஞ்ச மர்மங்கள்: காமா கதிர் வெடிப்புகள்

    பிரபஞ்ச மர்மங்கள்: காமா கதிர் வெடிப்புகள்

    1967 இல் வேலா 3 மற்றும் வேலா 4 ஆகிய செய்மதிகள் விண்வெளியில் அதி சக்திகொண்ட காமா வெடிப்புகளை அவதானிக்கின்றன. இந்த காமா கதிர்வீச்சு இதுவரை எந்தவொரு அணுவாயுதப் பரிசோதனையிலும் அவதானிக்கப்படாத வித்தியாசமான கதிர்வீச்சாக இருக்கிறது.

  • ஓரையன் நெபுலா: இந்த வருடத்தின் சிறந்த தாய்

    ஓரையன் நெபுலா: இந்த வருடத்தின் சிறந்த தாய்

    நெபுலாக்கள் விண்வெளியில் காணப்படும் தூசு மற்றும் வாயுக்களால் உருவானவை. இவற்றில் இருந்து பில்லியன் கணக்கான விண்மீன்கள் பிறக்கும். கடல் குதிரையைப் போலவே, விண்மீன்களும் ஆயிரக்கணக்கான உடன்பிறப்புகளுடன் பிறக்கின்றன. இவை அனைத்துமே ஒரே வாயுத் திரளில் ஒரே நேரத்தில் பிறந்தவை.

  • பூமியில் உயிருக்கான ஆரம்பம்

    பூமியில் உயிருக்கான ஆரம்பம்

    உங்கள் உடம்பில் உள்ள அணுக்கள் எல்லாமே பில்லியன் கணக்கான வருடங்களுக்கு முன்னர் விண்மீனில் இருந்து உருவானவை. – உங்கள் எலும்பில் இருக்கும் கல்சியம், இரத்தத்தில் இருக்கும் இரும்பு, நீங்கள் அணியும் நகைகளில் இருக்கும் தங்கம் உள்ளடங்கலாக எல்லாமே பில்லியன் கணக்கான வருடங்களுக்கு முன்னர் விண்மீனில்…

  • CLASP: செய்மதிகளின் காவலன்

    CLASP: செய்மதிகளின் காவலன்

    விண்ணுக்கு ஏவப்பட்டவுடன், ராக்கெட்டில் இருந்து பிரிந்து வெறும் ஐந்து நிமிடங்களுக்குள் பூமியின் மேற்பரப்பில் இருந்து 150 கிமீ உயரத்தில் இருந்து சூரியனை ஆய்வு செய்துவிட்டு பரசூட் மூலம் பத்திரமாக மீண்டும் பூமிக்கு வந்துவிட்டது.

  • தப்பியோடும் பெரும்திணிவுக் கருந்துளை

    தப்பியோடும் பெரும்திணிவுக் கருந்துளை

    பெரும்திணிவுக் கருந்துளை என்பது அதனது பெயர் சொலவது போலவே மிக மிகத் திணிவுகொண்ட கருந்துளைகளாகும். இவை சூரியனைப் போல பில்லியன் மடங்கு திணிவைக்கூட கொண்டிருக்கும். எண்ணிப்பார்க்க முடியாதளவுக்கு சக்தியைக் கொண்டிருக்கும் இந்தக் கருந்துளைகள் அருகில் இருப்பவற்றை கபளீகரம் செய்வதிலும் வல்லவை.

  • வில்லியம் ஹெர்ச்செல் : இசை ஞானியில் இருந்து இயற்பியலாளர் வரை

    வில்லியம் ஹெர்ச்செல் : இசை ஞானியில் இருந்து இயற்பியலாளர் வரை

    19 வயதில் ஐக்கிய ராஜ்ஜியத்திற்கு குடிபெயர்ந்த பின்னரே இவரது அறிவியல் ஆர்வம், குறிப்பாக விண்ணியலில் அதிகரித்தது. இவரது சகோதரி கரோலின் ஹெர்ச்செல்லின் உதவியுடன் ஒளித்தெறிப்பு தொலைக்காட்டி ஒன்றை வடிவமைத்து அதன் மூலம் இரவு வானின் அற்புதங்களை ஆராயத்தொடங்கினார்.

  • டீடீ என்னும் தூரத்து குறள்கோள்

    டீடீ என்னும் தூரத்து குறள்கோள்

    குறள்கோள் எனப்படுவது கோள்களைப் போலவே சூரியனைச் சுற்றிவரும் சிறய விண்பொருட்களாகும். கோள்களைப் போலவே இவையும் கோள வடிவமானவை. கோள்களுக்கும் குறள்கோள்களுக்கும் இடையில் இருக்கும் ஒரே வித்தியாசம் என்னவென்றால் குறள்கோள்கள் அதனது சூரியனைச் சுற்றிவரும் பாதையை இன்னும் சுத்தப்படுத்தவில்லை.

  • நீர் நிறைந்த வளிமண்டலத்தைக் கொண்ட புறவிண்மீன் கோள்

    நீர் நிறைந்த வளிமண்டலத்தைக் கொண்ட புறவிண்மீன் கோள்

    400 ஒளியாண்டுகளுக்கு அப்பால் இருக்கும் ஒரு புறவிண்மீன் கோளொன்றின் வளிமண்டலத்தில் நீர் நிறைந்திருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்தக் கோள் அண்ணளவாக நமது நெப்டியூன் அளவாகும், மற்றும் அதனது தாய் விண்மீனை மிக அருகில் சுற்றிவருகிறது.

பிரிவுகள்